Tuesday 26 June 2012

விலாசம் தேடி...

காதல்
எனக்குள் வந்தபோது
நடப்பதெல்லாம் மறந்து போனது...

உன்
பொய்யான வார்த்தைகள்
எனக்கு சுகமாய் இருந்தது...

காதலை கற்றேன்
என்னில் நீ
காதல் கலவியை கற்றாய்

வண்ணங்களாய் வர்ணிப்பாய்
அங்கமெல்லாம்
அழ்காய் ரசித்தாய்...

மோகத்தின் வைரஸ் எனக்குள்
மேகமாய் சூழ்ந்ததால்
வண்டாய் வந்து வாடைபிடித்து
தேனுறிஞ்சி சென்றாய்...

சிலநிமிட மாற்றங்கள்
சிந்தனை இழந்தது
வருடங்கள் ஆகியும்
வடுக்களாய் வருடுகிறது...

வருவாய் என காத்திருந்து
ஆண்டுகள் ஐந்து ஆனபின்னும்
உன் வாரிசின் வயதும்
நம் பிரிவின் நினைவும் ஒன்றாய்...

இன்னும் கேள்விகள் எனக்குள்
நான் விதைவையா?
திருமதியா?

அன்புச்செல்வனின்
ஆசைவார்த்தையில் என்
ஆயுளும் கெட்டி...

அவனின் வேட்க்கையோ
அப்பா யார்?

விடையை தேடினேன்
விடியலையும் தேடினேன்
விலாசம் மட்டும்
அமாவாசையாய்........??????

Sunday 3 June 2012


பயணம்....

வேர்களாய்  துளிறிடத்தானே கூடினோம்
இன்பம் மட்டுமே கண்டிட
துன்பங்களும் சுமந்து
துவங்கினோம் யாத்திரை

மீட்டால் திரும்ப மீளாத ஞாபகங்கள்
மிளிரும் சிநேகம் விடர்த்தும்
பூந்திங்களாய் தொடடருகையானு என் யாத்திரை...

சிந்தனை சிறகடிக்கும் கடல்போல... தமிழ்
சிற்ப்பங்கள் ஆயிரம் ஜனிக்கும் - தூரிகையால்
துக்கத்தின் முள்ளுகள் புஷ்ப்பங்களாய் தொடுத்து
எழுதி தொடருகையானு என் யாத்திரை...

தீர தேசங்கள் சென்றாலும் தீயாய் நெஞ்சம்
துக்கங்கள் துரத்துகையில்
கவிலில் கண்ணீர் எழுதும் - புது
கவிதையாய் தொடருகையானு என் யாத்திரை...

எத்தனையோ ஜென்மாந்தரங்களாய்
எத்தனை எரிந்தாலும் எண்ணை வற்றாத
சித்திர விளக்காய் திகழும் - என்
தாய் தமிழோடு தொடருகையானு என் யாத்திரை...

சொப்பணங்கள் ஆயிரம் கண்டு
சோர்ந்து போவதுமுண்டு-ஆனாலுமந்த
சொர்ண நிமிடங்கள் வந்தென் நெஞ்சில்
சந்தணம் சாற்றுமென தனியே
தொடருகிறேன் என் யாத்திரை.....

விடியலின் வெளிச்சம்
புழுக்கள் ஊராத
பழுப்பேறிய கஞ்சிக்களையத்தின்
ஓரத்தில் ஒதுங்கியிருந்த
அறை வேக்காடு
திணைச் சோற்றினை
தேடி எடுத்து
ஊமை குழந்தைக்கு புகட்ட
எத்தனிக்கிறாள் ஈழத்தாயொருத்தி...
சற்றே தொலைவில்
பெருத்த சத்தத்துடன்
அதிர்ந்து அடங்கும்
இன்னும் ஒரு கன்னிவெடியில்
அது தவறி எங்கோ விழுந்துவிட
அடங்காத பசியில்
அவளின் வற்றிய முளைகளை
வெறுமையாய் பார்த்தபடி
மடியில் கிடக்கிறது
அந்த செவிட்டுக் குழந்தை...
காம்பிழந்த, இதழ் இழந்த,
ந்தம் இழந்த
சுங்கிய பூக்களாய்
எம் மிழ் பெண்டுபிள்ளைகள்
மானத்தைக் கூட
அரைகுறையாய் ட்டுமே
றைக்க முடிந்தடி...
ஈழ த்தம்
தோய்ந்த துப்பாக்கி வைகள்
கொன்று தீர்த்த
பிஞ்சு உடல்களின் மேல்
திந்து கிடக்கின்ற
ராணுவ பூட்சுகள்...
ரும்புகை றைக்காத
வானத்தைப் பார்த்ததில்லை...
எங்கள் கோதனோ,
கோதரியோ மாய் எரியாமல்
ரும்புகை ருவதில்லை...
விடியலின் வெளிச்சம்
இன்றும் தேடுகிறோம் நாங்கள்...


அத்தான் என்றழைப்பாள்

அத்தான் என்றழைப்பாள்
அதிகாலை பொழுதினிலும்
கனி இதழ் ரசம் கொடுப்பாள்

புரியாத பாஷையிலே
செல்லமாய் திட்டுவாள்...
கண்கொட்ட விழித்திருப்பாள்
காணாது தவித்திருப்பாள்

நல்லிரவும் தாண்டிடுமே
வெள்ளி நிலா மறைந்திடுமே
மணிகணக்காய் பேசிடுவாள்
மழைபோல சிரித்திடுவாள்

உறக்கத்திலே தவழ்ந்திடுவாள்
உன்மையிலே என் மழலையவள்
கண்ணிமையில் கவிவடிப்பாள்
கவிதையிலே வில்தொடுப்பாள்

என்
காதல் அதை சொல்கையிலே
கொள்ளென நகைத்திருப்பாள்
காலம் வர காத்திருந்தேன்
கடிதம் ஒன்று தந்துவிட்டாள்

அரவம் ஒடுங்கிய தருணத்தில்
அடுக்கடுக்காய் கணைதொடுத்தாள்
அவள் இதயத்தில் இடம் கொடுக்க

இடைவெளி இல்லாத
இனிமையான இடம் கேட்டேன்
சம்மதம் தந்தவள்
அன்றே என்னை
அத்தான் என்று அழைத்துவிட்டாள்.



அமாவசை நிலவு..............

உன் வீட்டு வாசல் பெருக்கி
நட்ச்சத்திர புள்ளி வைக்கிற
வெள்ளி நிலவே...
கோலம் போடுவதை மட்டும் ஏன்
தள்ளி வைக்கிறாய்...

அல்லி மலரும் மலரும்
பலரும் தண்ணி போதையில்
உளரும் இரவில் மட்டும் வருகிறாய்
உன்வரவுக்காய் காத்திருக்கும்
உறவுகள் பல உண்டு பூமியிலே....
பதில் கூறிவரும் வெண்ணிலவே  

அது சரி
எனக்கு ஒரு சந்தேகம்
அமாவசையன்று
நீயும் கதிரவனும்
ஒருசேர காணமல் போவது
அம்மாவகும் ஆசையிலா?

நீ நீயாகவே இரு நிலாவே
உன்னால்
மேடிட்ட வயிற்றை தூக்கிகொண்டு
கோடிட்ட பாதையில் வலம் வரமுடியுமா?
அல்ல பிஞ்சு நிலவை விட்டு தனிமையில்தான்
வரஇயலுமா?

நீ ல்லையேல்
இடியும் மின்னலும்
மேகமழை கண்ணிரும்
பூமியை நனைக்கும்
பிரளயம் நடக்கும்...
 நினைத்து பார்க்கவே
நெடஞ்சம் நடுங்கும்...
நீ நீயாகவே இரு...நிலாவே

உன்னை கண்டு பல் இலிக்கும்
அல்லியிடம் சொல்லிவை
இப்பொழுதே
கவிஞனை தவிர
வேரு யாரும் புகழ்வதில்லை
எதிர் காலத்தில்
அவனும் சீண்ட மாட்டான்
அதன் இருமாப்பில்