Monday 28 May 2012


வலியது...வலி இது...

நீ தந்த ஜீவனிலே
நானின்று வாழுகின்றேன்
தனிமையிலே வாடுகின்றேன்

நீ இல்லா நாட்களிலே
நண்பனெ யாருமின்றி
கந்தல் ஆடை உடைஉடுத்து
கையில் ஏதும் இல்லாமல்
வீதிகள் தோறும் விரைந்து சென்றேன்
என் நண்பா....

கடந்து முடிந்த காலத்தை
யாதென அறிந்து கொள்ள
ஆசையேதும் எனக்கில்லை

எனினும் என்பால் ஓராசை- உள்
எழுகிறது உன்பால் உறவாட
எனை நீ உன்வசம் எடுத்துக்கொள்
இடைவெளி நம்மை பிரிக்காமல்

நின் அன்பை பெறுவதற்காக
அறிவை இழந்த பைத்தியமாய்
என் செயல் ஒழிந்து பலமுறை
இருளில் சிக்கிகொண்டேன் நான்

எனதான்மாவின் தோழன் நீ
உனை பலமுறை பார்க்கிறேன் – ஆம்
உன்னுள் என்னை தேடுகிறேன்...

உயர்ந்த அன்பை உன்மையுடன்
உள்ளத்தில் நேசித்திருப்பவனே
இரந்து வாழும் என்னிடம்
இன்பம் என்று வருவதன்றோ...?


          




ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான் கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது. பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும். கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான். மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது. "உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்

ஒரு கண்ணீர் விடியல்
(சுனாமி ஓர் நினைவுகள்)


கடற்கரை ஓரமெல்லாம் ஒப்பாரி
கட்டுமரங்களை தொட்டிலாய் கட்டி
தாலாட்டிபார்த்துவிட்டு தாழத்தள்ளி
தலை நசுக்கினாய்....

ஈரமணலில் குழிதோண்டி
நீர் நிரைத்து விளையாடி
உன் மடியில் தலை சாய்த்த- என்
வாரிசுகளை விழிங்கிகொண்டாய்...

சோறூட்டி உடல் வளர்த்து
பலம் கூட்டி தாயே
ஏன் என்னை மல்லாக்கப்போட்டு
சாகடித்தாய்...

பெருமூச்சுவிட்டு கிடக்கிறகடலே
உன்னைத்தான் கேட்க்கிறேன் –நீ
சரித்திரம் செய்ய எத்தனை
சமாதிகள் செய்தாய்...

ஐயோ...!!!
அன்று
உலகமே கதறி அழ
இப்படியாய் விடிந்தது


Saturday 26 May 2012

கறைபடாதே...
காமம் பற்றி எரிகிறது
தேகம் முழுதும்
அழகுகள் எல்லாம்
சாலையில் நடந்தது

நிர்வாணம்
சினிமாபோஸ்டரில்
குளித்துக்கொண்டிருந்தது

அரைகுறை ஆடையில்
ஊரவலம் போகிற பெண்பால்
பேய்கள்...
தேகம் முழுதும் பற்றி எரிகிறது
காரணம் எல்லாம் உன்னால் பெண்ணே...
கெடுகிறது மணம் கிடக்கிற பிணமும்
பெண்ணாய் கிடந்தால்....
நல்லவன் எல்லாம் நாசமானதும்
சாமியாரெல்லாம் சகதியில் சாய்ந்ததும்
உலகில் பாவம் முதலில் வந்ததும்
உன்னால் பெண்ணே....

மூடி மறை
தேடுகிறபடி செய்
திறந்து கிடந்தால்
சாக்கடையாவாய்....

சமாதியில் உன் பெயர்
சரியாய் எழுத சாஸ்த்திரம் செய்....
அழிகிற உடலை விலைபேசாதே
அரைகுறை ஆடையில்
ஆட்டம் போடாதே...

எரியவிடாதே
காமம் பரவி உலகமே அழியும்
கற்புக்கரசிகளை
கறைபடுத்தாதே......

Monday 7 May 2012


கல்லரை வரை சில்லரை....

பூசாரியும் காலணா கிடச்சாதான்
கடவுளுக்கு கால்பிடிப்பான்
கட்டியவளும் காசு இல்லேனா
கட்டில் காட்டமாட்டாள்...

கஞ்சிகளையம் கவுத்து வச்சி
காலு மேல கால போட்டு
காரசாரமா கபடி ஆடுவா...
பெத்தபிள்ளை விசலடிப்பான்
வில்லன்மாறி...

பேடித்து வீட்டுக்குள்ள விறகு இருந்தா
அப்பன்காரன் மாற்றி வைப்பான்..
மூனு வேளை சோறுபோட
ஒரு நாள் மறந்தாலும் கட்டியவ
மாரியத்தா ஆயிடுவா...

பெத்ததெல்லாம் சுத்தி நின்னு
கத்தியே குத்திப்போடும்...
அடடா பணமிருந்தா பாசம்வரும்
சொந்தமே சொத்திருந்தா தான்
சோறு போடும்
உறவே இப்படினா!
ஊர் எப்படிங்க...

வெள்ள வேட்டி இல்லைனா...
ஊர்காரன் ஆளுவச்சி வேவுபார்ப்பான்...
வெறும்பய ஆகிப்போனா
குடும்பத்தையே கூவமாக்கி
ஊர்மொத்தம் திறந்து வைப்பான்...

உதவிக்குன்னு போயிநின்னா
வேசியாக்கி விலைகேட்பான்
பணம் இருந்தா வேட்டிகட்டு...
மானம் போகாது!

மரித்ததும் உன்னை
மண்ணுக்குள் தள்ள
வெட்டியானுக்கும் தள்ளனும்...
புரியுதா??

Sunday 6 May 2012



அனாதைகள்...
உள்ளுக்குள்ளேயே அழுகிறேன்
யாருக்கு தெரிந்துதான் என்ன?
உதவுகிற கரங்கள் வெளியே இல்லையே...

உள்ளே இருப்பவன் மூழ்கி
மூச்சுமுட்டி வெளியே வரட்டும்-ஆகையால்
நான் நெஞ்சுக்குள்ளேயே அழுகிறேன்!

கடல் கடந்து அந்நியனானேன்
நினைவுகளை நெஞ்சுக்குழியில்
தேக்கி வைத்து தாகம் தீர்த்துக்கொள்கிறேன்...

சகாராக்களின் ஒட்டகங்களைப்போல்
பாரங்களை சுமந்து பள்ளமான முதுகள்...

மனைவி பிள்ளைகள்எங்களுக்கு
தூரத்துவானம்
உறவுகளோடு பேசுவதில்கூட
காலவரையரை...

காசுகள் எல்லாம் கடனுக்கு மட்டும்
எரிகிற நெருப்பில் நடக்கிறாய் பிணங்களாய்
படுக்கையில் கிடந்தால்
நரக வேதனை...

உள்ளுக்குள் அழுதேன்
சொந்ததேசம் அந்நியமாயின...

நம்தாய் தேசம் விரட்டியடித்தது
அந்நிய மண்ணில் எரிந்தது எம்மை
வேலை இல்லை என்று...

வேசியைப்போல் வேண்டாவிருப்பமாய்
அந்நிய மண்ணில் அநாதைகள்
நாங்கள்...
அழுகிறேன் நெஞ்சுக்குள்ளே...!




உன்னோடு...

என் நெஞ்சுக்குள் உயிராய் நீ இருந்தாய்
நிதமும் உன் முகம் பார்த்திருந்தேன்
விரிந்த என் மார்பில் நடக்கவிட்டு
உன் கால்பட நானும் காத்திருந்தேன்

உன்
வளைந்த இடையை நேராக்க
தடவி தடவி தவமிருந்தேன்

உன்
பருத்தகொம்பை அழகினிலே
மதுவை உண்டதாய் நான் கிடந்தேன்
நீடிய தடித்த கழுத்ததனை
விரலால் தொட்டு வாசித்தேன்

விரகம் எல்லாம் ஆரம்பமாய்
ஆ! எனபிளந்த உன் உதடுகளில்
மகரந்தம் பருக என் இதழ் பதித்தேன்

விடிந்த உன் கூந்தலில்
என் கைப்போட்டு இருக்கமாய்
உன்னை இழுத்துக்கொண்டேன்
இமயம் உடைந்து வழிந்தது போல்
உள்ளுக்குள்ளே நான் உணர்ந்தேன்

உன்
தலையனை மார்பில் முகம் புதைத்து
பிரண்டு பிரண்டு நான் படுக்க
எத்தனை ஆசை உன்னோடு
இரவுகள் முழுதும் கணாகண்டேன்...

Thursday 3 May 2012

வேடிக்கை

உயிர் அற்று கிடக்கும் தேகம்
கூடி அழும் கூட்டம்...
தலைவிரித்து மனைவி 
ஒப்பாரி
கதறி அழும் பிள்ளைகள்....

காரணமெல்லாம்
அவனைவிட்டு காற்று போனது
அவன் அதுவாயிற்று...
எதற்காக இந்த அழுகையெல்லாம்...

உடையவன் மரித்தான்
மஞ்சம் போனது
வருகிற காலம் காசுகள் வேண்டும்
என்ன செய்வது?
மனைவியின் அழுகை....

தகப்பன் மரித்தான் - இனி
என் தலை உருளும்
குடும்பம் எனக்கு பாரமாய் போகும்
என்ன செய்வது?
பிள்ளையின் அழுகை....

கிடக்கிற பீடை கொடுக்காமல் போனதே
கடன் கொடுத்தவன் கதறி அழுகை

இப்படி அனைத்தும் தனக்காய்
அழுதால்...
கிடப்பன் எதற்கு??

எடுத்து போ... எரித்து போடு...
அழுகை நாடகம் சில மணி நேரம்

மீண்டும் நாளை 
புதியது தொடங்கும்

எல்லாம் நாடகம்.....