Monday 31 October 2011

வந்து போச்சு வயசு....


ஆடி ஓடி ஒழச்சப்போ
அஞ்சாறு பவுனு சேத்து
அனுப்பி வைக்க
அலஞ்சி திரிஞ்சி
அலுத்தும் போச்சு
பாழாப்போன வரதட்சனை...


அப்பனுக்கும்
ஆத்தாலுக்கும்
ஆடிபோச்சு பல்லு கூட


எனக்கும்
அம்பது வயசாச்சு
அக்கம் ஒரேபோச்சு
தரித்திரியம் புடிச்சவனு....


இருபது வயசில
இருந்திச்சொரு மோகம்
காதலென்னும் பருவம்
சமாதி அயிபுட்டு
சண்டாள கிராமத்தில
நான்
சாதி கெட்டு போனதால...


முப்பது வயசுல
மொத தாரம் ஆவேன்னு
முனியங்கோயில் சாமி வந்து
குறிசொல்லி போனுச்சு
கல்யாண ஆசயது
கனவெல்லா பறந்துச்சு....


வயசான் பின்னாலும்
வண்ணம் பூசி பாத்தாக
வந்தவுக போனவுக


மினுக்கட்டான் பூச்சிபோல
ஊட்டுக்குள்ள கெடந்துப்புட்டேன்


அம்பது வயசிலாச்சிம்
தாயில்லா புள்ளைக்காக
ரெண்டாந்தாரம் வேனுமுனு
எவனாவது வருவான்னு
ஏங்கி கெடந்து தவிச்சுபுட்டேன்...


மாச வெட கொடுத்த பின்னும்
மாப்புள்ள வருவான்னு
பருவப்பூ பூப்பதுண்டு.....


ரெண்டாங்கெட்டான்
ஆயிபுட்டு என் பொழப்பு
இன்னும் நான்
கன்னியாவே....
அறகெழம் ஆனபின்னும்....


நான் ஆயிசுக்கும்
இப்படித்தான்
இருக்கோனுமா?!






குட்டி கவிதைகள்...

                                                                                       

கா த்திருக்கும் ஏழைகளின்
வே தனை அறியா 
ரி வர்.














கையில் இருக்கும் போது 
முகம் காட்டும் கண்ணாடி
கீழே விழுந்தால்
பார்ப்பவரை பின்னால் 
விரட்டும் கில்லாடி...















Sunday 30 October 2011

வாசித்து இதயம் கனத்துபோன வரிகள்..........


விடியலின் வெளிச்சம்

புழுக்கள் ஊராத‌
பழுப்பேறிய கஞ்சிக்களையத்தின்
ஓரத்தில் ஒதுங்கியிருந்த‌
அறை வேக்காடு
திணைச் சோற்றினை
தேடி எடுத்து
ஊமை குழந்தைக்கு
புகட்ட‌எத்தனிக்கிறாள்
ஈழத்தாயொருத்தி...


சற்றே தொலைவில்
பெருத்த சத்தத்துடன்
அதிர்ந்து அடங்கும்
இன்னும் ஒரு கன்னிவெடியில்
அது தவறி எங்கோ விழுந்துவிட
‌அடங்காத பசியில்
அவளின் வற்றிய முளைகளை
வெறுமையாய் பார்த்தபடி
மடியில் கிடக்கிறது
அந்த செவிட்டுக் குழந்தை...


காம்பிழ‌ந்த‌, இத‌ழ் இழ‌ந்த‌,
ம‌க‌ர‌ந்த‌ம் இழ‌ந்த‌
ந‌சுங்கிய‌பூக்க‌ளாய்
எம் த‌மிழ் பெண்டுபிள்ளைக‌ள்
மான‌த்தைக் கூட‌
அரைகுறையாய்ம‌ட்டுமே
ம‌றைக்க‌ முடிந்த‌ப‌டி...


ஈழ ர‌த்த‌ம்
தோய்ந்த‌ துப்பாக்கி ர‌வைக‌ள்
கொன்று தீர்த்த‌
பிஞ்சு உட‌ல்க‌ளின்
 மேல்ப‌திந்து கிட‌க்கின்ற‌ன‌
ராணுவ‌ பூட்சுக‌ள்...


க‌ரும்புகை ம‌றைக்காத‌
வான‌த்தைப் பார்த்த‌தில்லை...
எங்க‌ள் ச‌கோத‌ர‌னோ,ச‌கோத‌ரியோ
ச‌ட‌ல‌மாய் எரியாம‌ல்
க‌ரும்புகை வ‌ருவ‌தில்லை...
விடிய‌லின் வெளிச்ச‌ம்
இன்றும் தேடுகிறோம் நாங்க‌ள்...

Saturday 22 October 2011

இயற்க்கை






















வறண்ட
வாய்க்காலில்
நீர் பாய்ச்சுகிறேன்...

வாசமுள்ள
மலர்களால் தோரணம்
கட்டி
பூமியின்
ஆயுசுக்காலங்களை
கூட்டிப்பார்க்கிறேன்...

பட்ட மரங்களில்
ஊஞ்சல் கட்டி
கத்தி படாமல்
பாதுகாக்கிறேன்...

வெட்டிய வாழையை
விருந்துக்கு அழைத்து
வரவேற்க வாசலில்
இருத்தி வைக்கிறேன்....

கற்றவை
எல்லாம்
ஒன்றாய் கூட்டி
தர்மம் செய்வதை
கற்று கொடுக்க
நீங்களும்
எங்கள் வரிசையில்
வந்தால்
எத்தனை நன்மை
 யாவருக்கும் உலகில் .......



தாய் கடவுள்

என் உதடுகள்
உறிஞ்சிய தாய்பால்-அது
உதிரம் கலந்தது!

உடலுக்குள்
என்
உயிர்வளர்த்த கடவுள்...

பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

உலகிற்கு
நான்
வந்த வாசல் வழி...

நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!

நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!





Wednesday 19 October 2011

எனது நன்பர் கவிஞர் காவிரிமைந்தனுக்கு...

காகையும்
நீயும்
சொந்தக்காரர்கள்...

கூடிவாழ்வதில்,
கொடுத்து வாழ்வதில்,
காத்துவாழ்வதில்...

வேறொன்றும் இல்லை தவறாக....

நீ
வற்றாத காவிரி
உன்
உதிரத்தில் வளர்ந்தது
தமிழ்...
வானொலியால்...
வானலையில்...

அமீரகத்தில்
தேர் இழுத்தாய்...
வளர் தமிழ்
வளர்பிறையாய்...

இனி
பாலைவனத்தில்.....

காவிரி....?????

வரண்டுபோகுமா?
வந்துபோகுமா?

மாதம் ஒருமுரையாவது
கராமாவில்
கரைபுரண்டு ஓடும் ...

கவிதையும்...
கண்ணதாசனுமாய்...

தமிழும் தேருமாய்

கர்நாடகத்தில்
கமண்டலத்தை
காக்கை கவிழ்த்ததால்
காவிரி.
..
கவிஞர்
கண்ணதாசன்
பேனா காகிதத்தில்
கவிழ நீ...

காக்கையும்
நீயும்
உறவுக்காரர்கள்
உன்மைதானே....

ஈரம்
நீ வளர்த்த இந்த மரத்தில்
நீ வார்த்த நீரில்

ஈர மண்ணின் நேசத்துடன்
கலைச்செல்வன்

என் தேவதை...


என் தேவதை...

உன் புன்னகையின் முன்
பொன்னகை வெட்கி
தலைகுனியும்...

தலை நிமிர்த்தும்
பூக்கள் எல்லாம்
அன்னாந்து பார்த்து
அதிசயிக்கும்...

தாமிரபரணியின் மீன்கள்
தாரகை உன் வருகை கேட்டு
துள்ளி குதிக்கும்...

குளக்கரை படிக்கட்டுகள்
உன் குதிகால் பார்க்க
ஏங்கி தவிக்கும்...

பூசுமஞ்சள்
புதுவாழ்வு பெறும்
உன் கை பட்டு
பியர்ஸ் சோப்பும்
சொல்லுமே…

"தும்சுமே பியார் கே..."

நீருக்குள் கலவரம்
நிதானமாய் நடக்கும்
தவளைகள் எல்லாம்
தம்பட்டம் அடிக்கும்...

தண்ணீருக்குள் தாமரை
தள்ளாடி நிற்க்கும்
தங்கபதுமை உன்
தங்கமேனி கண்டு...

கள்ளத்தனமாய்
காணாங்கோழி
கண்டுரசிக்கும்...


உன் கூந்தல்துவட்ட
 உதிரும் நீர்துளி
கண்ணீர் வடிக்கும்...

கண்ணாடி முன்பு நீ
நிற்பது கண்டு
கண்கள் கூசும் கண்ணாடியும்
கண்ணடித்துப் பார்க்கும்...

பவள மல்லி பால் நிலவே
பட்டணத்து
ஜவுளிக்கடைபொம்மையெல்லாம்
ஜொள்ளுவிட்டு பொறாமை கொள்ளும்...

அதிகாலை சூரியனும்
அன்பே நின் அழகை கண்டு
அதிசயிக்கும்...

என்
நினைவெல்லாம் நீ இருக்க
நிச்சயம் வருவேன்
நானுனக்கு மணாளனாய்...

மாப்பிள்ளை நான்
அதிஷ்ட்டக்காரன்...

என் அம்மா


என்னை கட்டியணைத்து
மார்போடு போட்டு
முகம் புதைக்க
பாலூட்டி
விரல்களால்-சிரம்
தடவிய அம்மா...

நா – தடுக்கி தடுமாறி
பேசியதெல்லாம்
சொல்லுடா சொல்லுடா
என்று மண்டிபோட்டு
என் குரலுக்காய்
தவம் கிடந்த... அம்மா...

தடுமாறி விழுந்து விழுந்து
 நடக்க நான்  பழக
தோள் கொடுத்து
கைகொடுத்து
முட்டிதேய அவளும் நடந்து
பாவம் என் அம்மா...

அழுகின்ற போதெல்லாம்
ஓடியோடி சாகிறவள்
என் அம்மா...

வளர்ந்து
அனுஅனுவாய் என்னை
ரசித்துப்பார்த்தவள்
பசித்தலுக்கு மட்டுமல்ல
அம்மா...
கனத்துப்போகிறது
எழுதத்தெரியவில்லை...

என்  நெஞ்சமெல்லாம் அம்மா
 நெஞ்சுக்குள்
சுமந்து பாரமாய்
நான் உணர்ந்தேன்
என் தாய்க்கு
என்ன நான் செய்தேன்?


நான் தங்கிய நாட்களெல்லாம்
சுமந்து தீர்த்த வலியெல்லாம்
எடுத்துபோட்ட வாந்திக்கெல்லாம்

என் அம்மா
குனிந்து நிமிர்ந்து
பட்ட வேதனைக்கெல்லாம்
கடவுளே !
ஏன் ஒரு ஜனனத்தை படைக்க
ஒரு ஜீவனை ஏன்
வேதனிப்பிக்கிறாய்?

இப்படியானால்
நீ என்ன செய்கிறாய்??
படைப்பு முழுதும் பொறுப்பாய்
செய்தவள் என்
தாயல்லவா?!

வணங்குவதை காட்டிலும்
கைமாறு உண்டோ ?
சரிதானே
நீயும் சம்மதிப்பாய்
என்முடிவும் சரியானதென்று.

என்
நெஞ்சுக்குள் சுமந்து
பாரமாய் நான்
உணர் ந்தேன்...

என்ன கைமாறு
நான் செய்தேனென்று...