Friday 2 November 2012

எங்கே...



உனக்கு நீயே
தெரியாது போனால்
தோற்றுப்போவாய்

உன்பெயர் மட்டும்
தெரிந்தால் போதுமா?
பூர்விகம் அறிய
வேண்டாமா?

ஒருவரால் கூடாது
இருவர் கூடி
ஆணுக்குள்
உயிரை வைத்து
பெண்ணுக்குள்
உருவம்

ஊதிய காற்றில்
எல்லாம்
அசைந்தது
உருவம் வெளியே
வந்து விழுந்தது

கதவுகள் தானாய்
மூடிக்கொண்டது
வந்து விழுந்ததும்
கதறி அழுதது... இனி
மீண்டும் போவது எப்படிஎன்று...

எல்லாம் பார்க்கிறான்
ஊதியவன்
ஓரமாய்
நின்று.
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.

மூடிவை...



வேலி
போட்டுக்கொண்டது
பழாப்பழம்...

ரோஜாவுக்கு கூட
முள்ளிருந்தால் தான்
அழகு...

பெண்ணே
உரித்துப்போட்டால்
பழங்கள் கூட
கெட்டுப்போகும்...

நீ – என்ன ?
திறந்து வைத்தால்
ஈக்கள் மொய்க்கும்
சாலை ஓரங்களில்
விற்கப்படும்
இனிப்பு பண்டமா?


இயற்கை உடுத்தியதை
உரியாதிருப்போம்
உன்னை
நீயே
இழிவுக்கு எடுத்துச்
செல்லாதே!

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

வன்முறை



பணிநீர் ஆடி
தென்றல் துடைத்து
சூரிய ஒளியில்
பூக்கள் திருவிழா...
சீட்டி அடித்து
வண்டுகள் வருகை
வட்டம் போட்டு
வாசம் நுகர்ந்து
திறந்த குப்பியில்
மகரந்த பருகை...

வந்து அமர்ந்தன
பட்டாம் பூச்சிகள்...
காதில்கேட்டன...
இரகசியம் என்ன ! பூவே
வண்டுகள்
சொன்னதன்
இரகசியம் என்ன ??
சொல்லி
அழுதன பாவம்
மலர்கள்...

உன்னை
உறிஞ்சி
தேன் எடுத்தேன்
பூவே...
காதலால்
அல்ல... 


வண்டு என் ஜாதி
முரடன்
என்பது – உனக்குத்
தெரியாது போனால்
பொறுப்பு நானால்ல...

காற்றடிக்கும் – மீண்டும்
நிமிர்ந்துகொள்!
என்று
இப்படிச்சொல்லி
அழுதன

பாவம் மலர்கள்
தடவிக் கொடுத்தன...
பட்டாம் பூச்சிகள்
பாவம் மலர்கள்...


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.

Thursday 1 November 2012

உணர்வாய்...




நான்...நீ...அவன்
வேறு வேறு அல்ல
இது
வேதாந்தம் அல்ல
விவேகம் உள்ளது- உண்மையை
அறியும்...

உயிர்கொடுத்தது
இருந்ததை எடுத்து
இறந்து போனது
முன்பே இருந்தது

உயிரோடு இருப்பது...
இருந்ததாய் இருந்தது
வட்டத்திற்கு ஏது
தொடக்கம்...!!

விரலால் தடவிப்பார்
ஆரம்பம் தெரிகிறதா என்று...!!!
பிராய்ச்சித்தம் செய்
வட்டத்தை விட்டு
வெளியே வா... எப்படியாவது!!

நான்...நீ...அவன்
வேறு வேறு அல்ல.

என்றும் அன்புடன்
                                                    கலைச்செல்வன்

நிம்மதி தேடி...




தாகமாய்
வாய் திரந்து
காத்துகிடக்கும்
சிப்பிகள் போல்...

வேதனையாய்
நான்கிடந்தேன்
கடற்கரை
மணரற்பரப்பில்...

நண்டுகள்
மெதுவாய் உரசி
ஓடின...
குழிதோண்டி
கண்ணாமூச்சி
விளையாடிக்காட்டின...

சப்தமாய் சிரித்து
அலைகள் கோபமூட்டின...
யார் அழுக்கையோ
துவைத்து தள்ளிய
சோப்புநுரைகளை
என்மேல்
வாரிதெளித்தன...

காற்று
மணலால் அடித்து
முகமெல்லாம்
பொத்துபோயின... 

கடலே...நீ...
சேமித்த கண்ணீர்
போதும்
என்கிறாயா?
நீயும் என்னை
துரத்தி தள்ளினால்
எங்கேபோவேன்?

யாரிடம் கேட்பேன்
யாராவது
முகவரிதெரிந்தால்
சொல்லுங்களேன்
தேடிப்போகிறேன்...

நிம்மதி தேடி...

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்