Friday 3 May 2013

உழைப்பாளி


இரவினிலும் பகலினிலும்
எத்தனையோ சாதனைகள்
பொங்குமொளி வெய்யிலிலும்
பொழியும் மழையினிலும்
உன் தேகம்
நனையுமோ காயுமோ...?

ஒரு பயனுமில்லது
உடல் வருத்தி – உன்
உழைப்பில் உயர்ந்தவர்தம்
வாழ்வதினில்
வழித்தடம் நீதானே...

உணர்வுகள் சிலையாக
உறவுகள் உளியாக
உனை உலுக்கியதோ – உன்
பருத்த மூங்கில்களே...

என் தோழனே
என் தோழனே

மென்மை குரலெழுப்பு
உந்தன் உயிர் நரம்பெல்லாம்
இனைந்திசைக்கும்
இசை எல்லாம்

நீ
சிந்தும் வியர்வையெல்லாம்
சிந்துவெளி பெருவெள்ளம்

பாலைவனம் சோலைவனமாய்
சோர்வுகளே சொந்தங்களாய்
பூத்துகுலுங்கும்
நந்தவன வாசமெல்லாம்
உன்
நெற்றி நீர்
நிலத்தில் விழ
நிறம் மாறிப்போனதோ...

அடித்து நொறுக்கு
உடைத்து எழு
அடிமை சங்கிலி
அறுந்து போகட்டும்

நரம்புகளை முருகேற்று
இதயங்களை இரும்பாக்கு
அடரும் இருளை ஒழித்திடு
உழைப்பின் ஒளியை ஏற்றிவிடு
அண்டமும் அகிலமும்
உனதாகட்டும்...

தோழனே! தோழனே!

மாயக்கணவு காட்ச்சியெல்லாம்
மாறா இயற்கை ஓவியெமெல்லாம்
மயக்கும் நல்ல சிற்பமெல்லாம்
உன்
காய்த்த கரங்களின்
நினைவுசுவடுகளோ...?

மெத்தவருத்தி உழைத்தாலும்
மேனியில் மாலை போட்டாலும்
புகழ்வாரும் புழுதியை வாரி இறைப்பாரும்
இச்சகத்தினில் ஒன்றே...

அகிலமே
அசந்து நிற்கும்
ஆண்டவனின் படைப்பண்றோ
உழைக்கும் வர்க்கம் யாவரும்

வாழிய தோழனே வளமோடு...

                                                                                                          என்றும் அன்புடன்
                                                                                                           கலைச்செல்வன்