Tuesday 29 November 2011

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

பாவாடை தாவணியில்
நினைவுகளின் நீரோடையில் தெளிவான இளம்பருவம்!
வாலிபம் வந்து தலைநீட்டும் அது ஒரு வசந்தகாலம்!!
தலைவன் தலைவி துணைதேடும் மானுட விளையாட்டு!
இறைவன் படைப்பில் இதயங்கள் இணையும் திருமணம் எனும்கூட்டு!!

காதல் என்னும் பரவசத்தால் ஆயிரம் பரபரப்பு!
காலை மாலை வேளைகள் எல்லாம் நெஞ்சில் துடிதுடிப்பு!
எண்ணிப் பார்க்கும் இதயத்தில் எத்தனை அலையடிக்கும்!
எண்ணத்தானே முடிவதில்லை இதுவரை ஒருவருக்கும்!

கனவுகளிலே மிதப்பதுவே பருவம் செய்யும் ஜாலமாகும்!
கண்களிலே சுமப்பதுவே பருவம் செய்யும் தேவலோகம்!
மன்மதனை அழைத்திடவே மனதிற்குள் சுகம் தோன்றும்!
மலர்க்கணை பாய்ந்திடவே மணநாள் பெறும் சொர்க்கமாகும்!

தமிழகத்துப் பண்பாட்டில் உறவுக்குள் பெண் எடுப்பதும், கொடுப்பதும் தாரளமான ஒன்றே! இதனாலேயே.. இளம் வயது முதல், இவன் - இவளுக்கு, இவள் - இவனுக்கு என்று பெரியவர்கள் முடிவு செய்வதுமுண்டு. தமக்கை மகளைத் தாரமாக ஏற்றிருக்கும் ஆண் மகன்கள் அதிகமுள்ள நாடு நம் தமிழ்நாடு. இந்தப் பாரம்பரியம் பட்டுவிடக்கூடாதென கெட்டிக்காரத்தனத்துடன் இன்றும் கடைப்பிடிக்கும் குடும்பங்களும் அதிகம் உண்டு. இவ்வரிசையில் இளம் பருவத்தில் தான் கண்ட பாவாடை தாவணியை மறக்க முடியாமல், பருவத்தைச் சுமந்துவரும் ஆடவர்கள் கோடியுண்டு! அன்று பார்த்த அந்த உருவமா.. இப்படிச் செழித்து, கொழித்து வளர்ந்து வதனம் காட்டுகிறது? எண்ணத்திரையில் சின்னவளாய் கண்ணுக்குள் நின்றிருந்த அவளைச் சிங்காரமாய்.. ஒய்யாரமாய்.. சேலை கட்டிய பூங்கொடியாய் பார்த்துப் பூரிக்கின்றவர்களில் ஒருவனாய்..
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

இந்தப் பாடலின் பல்லவியில்தான் பண்பாட்டின் பின்னணி உள்ளது. சரணங்களில் வரும் வரிகளும் வார்த்தை ரதங்களாய் அழகு சேர்க்கின்றன. அங்கேயும் கண்ணதாசன் முத்திரை பளிச்சிடுகிறது பாருங்கள்!

பொதுவாக பெண்டிர்தான் ... ஏழேழு ஜென்மங்களுக்கும் நீங்களே எனக்கு கணவராக வரவேண்டும் என்று சொல்வது வழக்கம்! அடடா.. ஒரு ஆண்கூட அப்படிச் சொன்ன சுவடுகள் இல்லையே..
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
என்று புதிய பிரகடன உத்தியைத் திரைப்படப்பாடலில் வடித்துச் சென்ற கவியுள்ளமே!
நிச்சய தாம்பூலத்தில் நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்பில்.. வெள்ளித்திரை வழங்கிய விருந்தல்லவா?

திரைப்பாடல் என்னும் வகையில்கூட இத்தனை அர்த்தபுஷ்பங்களை மாலையாக்கி வைத்த நின் திறனை எண்ணி வியக்கிறோம்! கேட்டு ரசிக்கிறோம்!!

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
(வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா) * 2
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
(தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா) * 2
முத்தமிழ் முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

திரைப்படம் – நிச்சய தாம்பூலம்
பாடல் – பாவாடை தாவணியில்
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.டி.கே.இராமமூர்த்தி

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையொன்றும் பஞ்சணையல்ல.. அவர் கடந்து வந்த பாதையில் நடந்த அனைத்துச் சம்பவங்களும் அனுபவப் பாடங்களை அடுக்கிக் கொண்டே வந்தன. அவைதான் அனேகமாக பாடல்களின் பல்லவிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கவிஞர்கள் பெரும்பாலும் மென்மையானவர்கள். சுக துக்கங்களை மற்றவர்கள் பெறுவதைவிட உணர்ந்து அதை பிரதிபலிக்கத் தெரிந்தவர்கள்! எத்தனையோ உதாரணங்கள் இதற்கு உண்டு - என்றாலும் சொல்கிறேனே இங்கு ஒன்று! தமிழ்த்திரையுலகில் காலடி பதித்துத் திசையைத் தீர்மானித்து பயணம் துவங்கிய கவிஞர்..

உடன் பிறந்த தங்கைகளின் திருமணம் தொடர்பாய் விரைவில் பொருளீட்டி வந்துவிடுவேன் என்று கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தக் காலக்கட்டம்! இதோ.. அதோ என்று காலச்சக்கரம் சுழல.. அடுத்து வந்தது ஒரு தந்தி.. அவசர அவசரமாய்.. தங்கையின் உடல்நிலை கவலைக்கிடம் என .. உடனே புறப்பட்டார்.. வானூர்திவாயிலாக மதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி செல்ல.. ஒரு மணி நேரம் தாமதம் என வானூர்தி நிலையத்தில் அறிவிப்பு.. சோகத்தில் ஆழ்ந்திருந்த அச்சமயம்.. அடுத்துவந்த செய்தியில் அதிர்ந்துபோனார் கவியரசர்.. ஆம்.. தங்கையின் மரணச்செய்தி.. மனதையே உலுக்கிப் போட.. நிலைகுலைந்த நெஞ்சத்தோடு நெக்குருகி வலுவிழந்தார். இதயத்தில் விழுந்த அடியை ஏட்டிலே வடித்தெடுத்தார்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் - அண்ணன்
வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்..

அமைதி என்பதற்கு நிரந்தர உறக்கம் என்றொரு பொருளும் உண்டு.. அன்புமலராய் கண்ணில் நிறைந்தவள்.. தன்னுதிரம் என்பதாக தன்னுடனே பிறந்தகொடி.. கண்ணெதிரே சாய்ந்ததனைக் கற்பனையால் சமைக்கின்றார்..

அற்புதமாய் ஒரு பாடல் முழுக்க முழுக்க கவிஞரின் சுய சோகத்தில்உதித்த இப்பாடல்..

பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கையின் எதிர்காலவாழ்வை எண்ணிடும் கனவாக.. கனிந்த இப்பாடலின் பின்னணியில் இத்தகு சோகம் புதைந்திருப்பது சற்றும் தெரியாமல்..

சுகமான கற்பனை போல் .. நடிகர் திலகத்தின் நயமான நடிப்பில்..
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில்.. இன்றும் நாம் கேட்டு மகிழ்கிறோமே..

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்.. டி.எம்.செளந்திரராஜன் குரலில்..
ரோஜா மலரின் அடியில் உள்ள முள்பட்ட உணர்வோடு..
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

நான் பேச நினைப்பதெல்லாம்..
வெள்ளித்திரையில் விளைந்த நன்மைகள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் சொற்சித்திரங்கள் பூத்துவந்த பூஞ்சோலை என்று வர்ணிக்காமல் இருக்க முடியுமா? மனித உறவுகளுக்கு அடிப்படை அன்பு என்பதும் ஆணிவேர் போன்றதுதான். ‘நான்’ ‘நீ’ என்று சொல்லும்போது உதடுகள்கூப் பிரிந்துகிடக்கின்றன.. ‘நாம்’ என்று சொல்லும்போதே உதடுகள் இணைந்திருக்கின்றன என்கிற உவமைகளை அள்ளி வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

அத்தகு அன்பில் முகிழ்க்கும் உறவுகளில் கணவன் - மனைவி என்கிற அதியற்புத உறவைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா இப்பாடல்? இசையால் நம்மை என்றைக்கும் வசப்படுத்தும் இரட்டையர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி வார்த்தளித்த அரும்புதையல் - டி.எம்.செளந்திரராஜன் - பி.சுசீலா குரல்களில் இழைந்தோடி பாலும் பழமுமாய் பவனி வருகிற பாடல்!!

அன்பு நெஞ்சங்களே.. மறக்க முடியாத இந்தப் பாடல்.. திரையில் எத்தகு சூழலில் வருகிறது என்பதைச் சற்றே நினைவூட்டுவது அவசியம் என்பதால்.. இதோ..

நாயகன் - நாயகியாய் சிவாஜிகணேசன் - சரோஜாதேவி - மருத்துவ விஞ்ஞானியான நாயகனுக்கு உதவிக்கரமாய் செயலாற்றி.. அவன் உள்ளத்திலும் இடம்பெற்று இல்லத்தரசியாகிறாள் நாயகி. கணவன்-மனைவி என்கிற பந்தம் ஏற்று சில நாட்களுக்குப் பிறகு தேனிலவுக்குப் பயணிக்கிறார்கள். அழகியதோர் புல்வெளியில் அமர்ந்திருக்கிறான் நாயகன்.. அடைக்கலமானதுபோல் அவன் மடியில் தலைசாய்த்திருக்கிறாள் அழகுமயில் நாயகி!

நாயகன் ஒரு வினா தொடுக்கிறான்! நானும் பார்க்கிறேன்.. நான் எழுவதற்குள் எழுந்து விடுகிறாய்.. எனக்கு வேண்டியது அனைத்தும் செய்கிறாய்.. நான் உறங்கிய பின்னரே துயில்கிறாய்.. உனக்கென இதுவரை எதுவுமே நீ கேட்கவில்லையே.. இப்போது உனது உதட்டிலிருந்து வரும் முதல் வார்த்தை .. ஏதாவது நீ கேட்க வேண்டும். அதை நான் கொடுக்க வேண்டும்.. பின்புதான் மற்ற பணி என்று முடிக்கிறான். நாயகி இதழ் திறக்கிறாள்.. பாடலின் பின்னணி இசைத் தென்றலாய் முன்செல்கிறது.

நான் பேச நினைப்பதெல்லாம்.. நீ பேச வேண்டும் என்கிறாள்..

சூழலுக்காக மட்டுமல்ல.. திரைக்கதைக்காகவும் முழுமையாகப் பொருந்தியது என்பதையும் தாண்டி.. மனிதகுலத்தில் மானுட இனத்தில் .. திருமண பந்தம் ஏற்கும் ஒவ்வொரு தம்பதிக்களுக்குமான இல்லற ரகசியம் இதில்தான் இருக்கிறது. இந்த அர்த்தப்புதையலை கண்டெடுத்துத் தந்தார் எங்கள் கண்ணதாசன் கலை இலக்கிய மையத்தலைவி முனைவர் பேராசிரியர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

இந்துக்களின் திருமணச்சடங்குகளின்போது மங்கல நாணேற்றும் தருணம்.. சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லப்படுவது வழக்கம்! மாங்கல்யம் தந்துநா மககேதனா என்று துவங்கும் அந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா? இன்று முதல் இவனது கண்வழியே இந்த உலகைப் பார். இருவரும் எப்டி இணைந்து வாழ வேண்டும் என்று வேதங்களின் சாரமாய் விளைந்த இந்த மந்திரத்தின் அர்த்தங்களை அப்படியே உள்வாங்கி 16 வரிகளுக்குள் வரைந்து வழங்கியுள்ளார் கண்ணதாசன். இப்போது மீண்டும் ஒரு முறை இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

நான் பேச நினைப்பதெல்லாம்..
வெள்ளித்திரையில் விளைந்த நன்மைகள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் சொற்சித்திரங்கள் பூத்துவந்த பூஞ்சோலை என்று வர்ணிக்காமல் இருக்க முடியுமா? மனித உறவுகளுக்கு அடிப்படை அன்பு என்பதும் ஆணிவேர் போன்றதுதான். ‘நான்’ ‘நீ’ என்று சொல்லும்போது உதடுகள்கூப் பிரிந்துகிடக்கின்றன.. ‘நாம்’ என்று சொல்லும்போதே உதடுகள் இணைந்திருக்கின்றன என்கிற உவமைகளை அள்ளி வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

அத்தகு அன்பில் முகிழ்க்கும் உறவுகளில் கணவன் - மனைவி என்கிற அதியற்புத உறவைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா இப்பாடல்? இசையால் நம்மை என்றைக்கும் வசப்படுத்தும் இரட்டையர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி வார்த்தளித்த அரும்புதையல் - டி.எம்.செளந்திரராஜன் - பி.சுசீலா குரல்களில் இழைந்தோடி பாலும் பழமுமாய் பவனி வருகிற பாடல்!!

அன்பு நெஞ்சங்களே.. மறக்க முடியாத இந்தப் பாடல்.. திரையில் எத்தகு சூழலில் வருகிறது என்பதைச் சற்றே நினைவூட்டுவது அவசியம் என்பதால்.. இதோ..

நாயகன் - நாயகியாய் சிவாஜிகணேசன் - சரோஜாதேவி - மருத்துவ விஞ்ஞானியான நாயகனுக்கு உதவிக்கரமாய் செயலாற்றி.. அவன் உள்ளத்திலும் இடம்பெற்று இல்லத்தரசியாகிறாள் நாயகி. கணவன்-மனைவி என்கிற பந்தம் ஏற்று சில நாட்களுக்குப் பிறகு தேனிலவுக்குப் பயணிக்கிறார்கள். அழகியதோர் புல்வெளியில் அமர்ந்திருக்கிறான் நாயகன்.. அடைக்கலமானதுபோல் அவன் மடியில் தலைசாய்த்திருக்கிறாள் அழகுமயில் நாயகி!

நாயகன் ஒரு வினா தொடுக்கிறான்! நானும் பார்க்கிறேன்.. நான் எழுவதற்குள் எழுந்து விடுகிறாய்.. எனக்கு வேண்டியது அனைத்தும் செய்கிறாய்.. நான் உறங்கிய பின்னரே துயில்கிறாய்.. உனக்கென இதுவரை எதுவுமே நீ கேட்கவில்லையே.. இப்போது உனது உதட்டிலிருந்து வரும் முதல் வார்த்தை .. ஏதாவது நீ கேட்க வேண்டும். அதை நான் கொடுக்க வேண்டும்.. பின்புதான் மற்ற பணி என்று முடிக்கிறான். நாயகி இதழ் திறக்கிறாள்.. பாடலின் பின்னணி இசைத் தென்றலாய் முன்செல்கிறது.

நான் பேச நினைப்பதெல்லாம்.. நீ பேச வேண்டும் என்கிறாள்..

சூழலுக்காக மட்டுமல்ல.. திரைக்கதைக்காகவும் முழுமையாகப் பொருந்தியது என்பதையும் தாண்டி.. மனிதகுலத்தில் மானுட இனத்தில் .. திருமண பந்தம் ஏற்கும் ஒவ்வொரு தம்பதிக்களுக்குமான இல்லற ரகசியம் இதில்தான் இருக்கிறது. இந்த அர்த்தப்புதையலை கண்டெடுத்துத் தந்தார் எங்கள் கண்ணதாசன் கலை இலக்கிய மையத்தலைவி முனைவர் பேராசிரியர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

இந்துக்களின் திருமணச்சடங்குகளின்போது மங்கல நாணேற்றும் தருணம்.. சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லப்படுவது வழக்கம்! மாங்கல்யம் தந்துநா மககேதனா என்று துவங்கும் அந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா? இன்று முதல் இவனது கண்வழியே இந்த உலகைப் பார். இருவரும் எப்டி இணைந்து வாழ வேண்டும் என்று வேதங்களின் சாரமாய் விளைந்த இந்த மந்திரத்தின் அர்த்தங்களை அப்படியே உள்வாங்கி 16 வரிகளுக்குள் வரைந்து வழங்கியுள்ளார் கண்ணதாசன். இப்போது மீண்டும் ஒரு முறை இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

Friday 25 November 2011

வெட்க்கம் கெட்ட கனவுகள்....


ஊர் உறங்கும்
நேரத்திலும் உன்
நினைவுகள் மட்டும்
விழித்திருக்கும்....உன்
வழி பார்த்திருக்கும்...

வென்மேகம் காத்திருக்க
வெள்ளைப்பணி பூத்திருக்க
நற்றாழம்பூ
வாசம் வீச
வந்து நிற்பாய் - என்
வாசலடி...

வானதி கூச்சலிட
வின்மீன் நீச்சலடித்து
விலாசம் கேட்க்கிறதே
நீ வந்த பாதை தேடி...

கிணற்று தவளை எனக்கு
உறவுக்காரி நீதானே!

அல்லிக்கும் அந்தி
மல்லிக்கும்
அடங்காத புன்னகை - உன்
கருங்கூந்தல் ஏற

நீ என்ன நர்த்தகியா
நளினமாய்
நாட்டியமாடுகிறாய் - என்
மனசுக்குள் நெடுநாளாய்...

வேஷக்கார உறவு
வெட்க்கம் கெட்ட கனவு
என்னுள் எப்படி...??????
எல்லாம் கண்ணே
உன்னை நினைத்து
உளறிய வார்த்தைகள்
உறக்கத்தில் கனா...

நடு இரவில்
நீ தரும் சுகம்
அப்பப்பா...
சொன்னால் புரியாதடி
பெண்ணே...

இரவு நேர பூக்களெல்லாம்
எங்கிருந்தோ உன்
மனம் வீசுகிறதே...

என்னுள் இருக்கைஇட்டு
இரு கை அனைக்க
இதயம் தவிக்க
இரவெல்லாம் உன்னோடு
வெட்ககம் கெட்ட கனவு...

மனதை வருடும்
வசந்தமே நீ
வந்தால் நான்
சுகமே...

உன்
நினைவெல்லாம்
நிலைத்திருக்கும்
என் வசமே...

மதி கெட்டவன்
நானாம்
மரித்து போகிற
மானிடம்
பிதற்றிக்கொள்கிறது...

முழுமதியே - என்னுள்
முழுதாய் நீ இருக்க
நானெப்படி கெடுவேன்...

தூரத்தில் இருக்கும் உன்னை
முத்தமிட ஆசையடி...
உள்ளுக்குள் பயம்
ஊருக்குள் கலவரம்
வந்திடுமோ...??????????

மேல்சாதி பெண்ணே
கீழ்சாதி என்னை
மணப்பாயோ...??
இல்லை
மறுப்பாயோ...??

Tuesday 22 November 2011

நிலவை பார்த்து வானம் சொன்னது

பார்த்து வானம் சொன்னது..
கவிஞர்களின் பாடுபொருள் நிலா என்பதில் புதுமையில்லை. ஆனால், ஒவ்வொரு கவிஞனும் புதிய புதிய யுக்திகளைக் கையாளத் தனது கற்பனைச் சிறகை விரிக்கிறான். கவிஞரின் கைவண்ணம் இங்கே தலைமை தாங்குகிறது. நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே! என்கிற பல்லவியை அடுத்து வருகிற வரியில் புராணத்தை பொருத்தமாய்க் கையாண்டுள்ளார்! திருநீலகண்டரின் மனைவி சொன்னது.. நீயொன்றும் புதிதாய் சொல்லிவிடவில்லை.. ஏற்கனவே திருநீலகண்டரின் மனைவி சொன்னதைத்தான் நீயும் சொல்லியுள்ளாய்! ஆணும் பெண்ணும் அனுசரித்துப் போவதுதானே இல்வாழ்க்கை! கருத்து வேறுபாடுகள் முற்றிடும்போது.. அனேகமாக.. இந்த வாசகம் சொல்லாத பெண்மை இன்னும் பிரம்மன் படைக்கவில்லை எனச் சொல்லலாம். அனுபவ முத்திரைகள் அள்ளித்தரும் கவி வள்ளலுக்கு இந்தப் பாடல் சர்க்கரைப் பொங்கல்தானே1

காலகாலமாக தீண்டாமைக் கொடுமை இந்த மண்ணில் நடந்துவருவது கண்டு வெஞ்சினம் கொண்ட வெண்தாடிவேந்தர் ஐயா பெரியார் ஆற்றிய சமுதாய சீர்திருத்தப்பணியால் தமிழ்நாடு நாகரீகமாய் நடைபோடுகிறது எனில் அது மிகையில்லை. ஆண்டுகள் பலவாக.. தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் மேடைபோட்டுச் சொல்லிவந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் தமிழர்களின் தன்மான வாழ்விற்கு விடிவெள்ளியாய் வந்தது என்பதை மறுப்பாரில்லை. இந்தப் பட்டறையில் கண்ணதாசனும் இருந்தவர் என்பதாலோ என்னவோ.. இதோ இந்தப் பாடல் வரிகளில் பளிச்சிடும் கருத்துக்கள் பாராட்டைப் பெறுகின்றன. திரைப்படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களின் வாயிலாக பாடல் என்னும் உத்தியில் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்த முடியும் என்று தெளிவாக்கியிருக்கிறார் என்பதை விட காலம் கண்ணதாசனுக்கு கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை அது சமதர்மம் கண்டதா?
ஆலயம் சென்றேன் அங்கே அனுமதியில்லை.. நீ
அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை..

இவ்வரிகளில்தான் நான் அசந்து போயிருக்கிறேன் அதுநாள் வரை.. இன்னும் இப்பாடல் பற்றி .. இதில் உள்ள வரிகளின் ஆழத்தைப் பற்றி.. அர்த்தத்தை எடுத்துரைக்க வந்தார் என் இனிய நண்பர் என்பதைவிட நான் வணங்கும் நல்லவர்.. நாலும் தெரிந்தவர்... திரு.சுந்தரவரதன் அவர்கள்! கண்ணதாசனை அணு அணுவாக ரசிப்பவர்.. மெல்லிசை மன்னருக்கு உள்ளத்தில் கோயில் கட்டி வழிபடுபவர்! ராம்கி என்னும் எந்தன் நண்பரின் இதயத்திலும் பரிபூரணமாய் இடம்பெற்றவர்!
அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது .. என்னிடம் அவர் கேட்ட கேள்வி இதுதான்..

தந்தை தன்னையே தாய் தொடாவிடில்..
நானுமில்லையே.. நீயுமில்லையே..

தாய் - தந்தை இல்லையென்றால் பிறப்புக்கு வழியெங்கே என்கிற கருத்து மட்டுமே எனக்குத் தெரிந்தது என்றேன். அவர் சுட்டிக்காட்டிய வரிகளில் ஏதும் புதிதாக பொருள் ஒன்றுமில்லை என்று நான் விளம்ப.. அவர்தந்த விளக்கம் கேட்டு வியந்துபோனேன்.

பொதுவாக.. கூடலின்பொருட்டு ஆடவனே பெரும்பாலும் 95% பெண்ணை நாடுவான். அழைப்பான்.. தொடுவான்.. தொடருவான். இது நம் மண்ணின் பாரம்பரியம். பாரதப் பண்பாடு. பெண் ஒருத்தி ஆடவனைக் கூடலுக்கு அழைப்பது அரிதிலும் அரிது. இப்படியிருக்க, கண்ணதாசன் ஏன் தந்தை தன்னையே தாய் தொடாவிடில்.. என்று எழுதி உள்ளார் என்கிற வினா விடை தேடியது. என்றோ ஒரு நாள் பெண்ணுக்கு அந்த ஆவல் எழும்ப .. அவள் துவங்கிடும் அந்தக் கூடலின் விளைவாய் பிள்ளை உருவானால், அது எல்லா வகைகளிலும் பலமுள்ளதாக, வீரியமுள்ளதாக, வளமுள்ளதாக அமையும் என்பது மெய்ஞானம் கண்டெடுத்த விஞ்ஞான உண்மை என்றார்.

ஒற்றைப் பாடலுக்குள் ஓராயிரம் பொருள் வைத்து - சற்றும்
கர்வமின்றி குழந்தைபோல் வாழ்ந்தவனே.. அந்த
வித்தைக் கற்றுக்கொள்ள திறந்த புத்தகம் நீயே!
வாசகன் போல் நானும் என்றும் உந்தன் வாசலிலே!!

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை அது சமதர்மம் கண்டதா?
ஆலயம் சென்றேன் அங்கே அனுமதியில்லை.. நீ
அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை..


சவாலே சமாளி திரைப்படத்திற்காக நடிகர் திலகத்துடன் கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா.. மெல்லிசை மன்னர் இயக்குனர் பி.மாதவன் ஆகியோரின் கூட்டணியில் விளைந்த வெற்றிப்படம்!

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

விழியே கதை எழுது.. கண்ணீரில் எழுதாதே!
கண்கள் என்பன காண்பதற்கு மட்டுமல்ல.. கண்ணீரைச் சிந்தவும்தான்! கண்களில் துவங்குமிந்த காதலில்.. கண்ணீர் உடன்பிறப்பாகிறது! ஏற்கனவே ஒரு சோகமான சூழ்நிலையில் கண்ணீரைப்பற்றி நான் எழுதிய வரிகள் இங்கே குறிப்பிடுவது பொருத்தம் என்று கருதுகிறேன்.
பூமியெனும் பரப்பைச் சுற்றி மூன்றுமடங்கு கடல்நீரால் சூழப்பட்டிருப்பது போதாமல்.. மேகங்களில் நீர் அள்ளிச் செல்வதும் போதாமல், நதி, குளம், ஏரி என நீர்ப்பரப்புகள் பலவும் போதாமல்.. படைத்துவிட்டான் கண்களிலும் கண்ணீரை!
விழிகள் தாங்கள் செய்த பாவத்திற்கு தண்டணை சுமக்கின்றன என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்!
அழுதுவிடுங்கள்.. சோகமிருக்கிறதோ.. இல்லையோ மனது லகுவாகிவிடும் என்கிறார் கவியரசர்.
நமக்காக அழுவதைவிட பிறருக்காக நாம் அழும்போதுதான் நம் கண்கள் நாகரீகம் பெறுகின்றன என்பதும் உண்டு.
வேதனையில் பிறக்கும் இந்த வெப்பநதி.. கண்ணிமைகளைத் தழுவி கன்னங்களைத் தாண்டும் கோலம்!
எண்ணங்கள் இதயத்துள் மூழ்கி.. மூழ்கி.. வெளிக்கொணரும் இந்தக் கண்ணீர் ஏழைகள் வாழ்வில் ஏராளமாய் இடம்பெறுவதும்..
காதலின் முடிவு பிரிவென்று வருகிறபோது.. இன்னும் கொஞ்சம் தாரளாளமாய் இதயம் பிழியப்படுகிறது.
உரிமைக்குரல் என்னும் திரைப்படத்தில் ஒரு உன்னத பாடல்! மெல்லிசை மன்னர் அவர்கள் அமைத்த இசையில்.. இனிமேல் அவரால் கூட இப்படியொரு மென்மையான இசையமைப்பைத் தரமுடியாது என்கிற அளவு நண்பர்களிடம் நான் சத்தியம் செய்ததுண்டு. கே.ஜே.யேசுதாஸ் - பி.சுசீலா குரல்களில் இதயம் பிரிய விரும்பாத பாடல்களில் ஒன்றாக.. வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில்..
விழியே கதையெழுது.. கண்ணீரில் எழுதாதே..
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி.. உனக்காகவே வாழ்கிறேன்!
கவிஞர் வாலி அவர்களே முழுக்க முழுக்க எழுதிய உரிமைக்குரல் திரைப்படத்தில் இந்தப் பாடல்மட்டும் அவர் எழுதவில்லை. மேற்கண்ட பாடல் அமைக்கப்பட்டச் சூழலும் பாடல் இணைக்கப்பட்ட விதமும் சுவராஸ்யானமவை. படம் முழுவதும் எடுத்தாகிவிட்டது. கதாநாயகனாய் பாத்திரம் ஏற்ற மக்கள் திலகம்.. இயக்குனர் ஸ்ரீதரிடம் கேட்கிறார். இன்னும் ஏதாவது காட்சிகள் எடுக்கப்பட வேண்டியது உள்ளதா? இல்லை என்கிறார் ஸ்ரீதர். எம்.ஜி.ஆர் - இப்படத்தில் கனவுக்காட்சி ஏதும் இடம் பெறவில்லையே.. எனது ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன ஆவது என்கிறார். அதுவும் அந்தக் கனவுக்காட்சியில் எத்தனை விதமான உடைகள் என்றெல்லாம் கேள்வி எழுமே என்கிறார். அதற்கு இயக்குனரின் பதில்.. இது எம்.ஜி.ஆர் நடித்த படமாக இருக்கலாம்... ஆனால், இது ஸ்ரீதரின் படம். இதில் கனவுக்காட்சிகளுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.
அடுத்து நடந்தது என்ன தெரியுமா? மக்களின் ரசிப்புத் தன்மையை.. தனது ரசிகர்களின் நாடியை முற்றிலும் அறிந்து வைத்திருத்த மகத்தான மனிதரல்லவா எம்.ஜி.ஆர்.. அவரே வினியோகஸ்தர்களுக்கு தொடர்புகொண்டு தொலைபேசியில் படம் தயாராக உள்ள விவரத்தைத் தெரிவிக்கிறார். அவர்கள் வழக்கம்போல்.. எத்தனை சண்டைக் காட்சிகள்? எத்தனைக் கனவுக்காட்சிகள்? என்று தன்னிடம் எழுப்பப்பட்ட அத்தனை தொலைபேசிகளுக்கும் விடையை இயக்குனரிடம் பெற்றுக்கொள்ளுமாறு சொல்லிவிடுகிறார். அவ்வளவுதான்.. ஸ்ரீதர் அவர்களின் இல்லத்திற்கு அன்றுமுதல் அடுத்து இரண்டு மூன்று நாட்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எல்லாம் இதைப்பற்றியே.. நிலையை உணர்ந்த ஸ்ரீதர் .. அவசர அவசரமாக.. எம்.ஜி.ஆரைத் தொடர்புகொண்டு ஒரு கனவுக்காட்சியை படமாக்கிவிடலாம் என்கிறது.. எம்.ஜி.ஆரும் இசைவு தெரிவிக்கிறார்.
அந்த அவசர கதியில்.. அமைக்கப்பட்ட காட்சியமைப்பு.. (வானத்திலிருந்து இறக்கைக் கட்டிக்கொண்டு இருவரும் பறக்கட்டும் என்று)வார்த்தைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வகையிலே காட்சியும் அமைக்கப்பட.. ஏற்கனவே எடுத்து வேறு ஒரு படத்தில் பயன்படுத்தப்படாமலிருந்த ஒரு பாடலை இந்தச்சூழலுக்குப் பொருந்தவே எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றைய காலக்கட்டத்தில்.. கண்ணதாசன் எழுதிய பாடல்கள் தன்னுடைய படத்தில் இடம்பெறுவதைத் தவிர்த்துவந்தார். எனினும் கிடைத்த இந்தப்பாடல் எழுதப்பட்டது கண்ணதாசனால்! இந்தச் செய்தியைத் தெரிவிக்காமல்.. எம்.ஜி.ஆர் அவர்களிடம் பாடல் காண்பிக்கப்பட்டது. பாடலைப் படித்தவுடன் கண்ணதானின் வரிகள் என்பதைக் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்துவிடுகிறார். என்னதான் இருந்தாலும் கண்ணதாசன் தமிழைக் காதலித்தவரல்லவா?
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)
கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

நிலவே என்னிடம் நெருங்காதே..
காலம் ஒரு விசித்திரச் சக்கரம்! மனம் நாடும்போது விலகிப்போகும்!
அது சேரும்போது மனம் விலகிப்போகும்! இந்தப் புதிருக்கு விடையெங்கே?
எடுக்காமல் விடுத்திருந்தால் .. நலம் என நினைக்கத் தோன்றுகிறது!

நிகழ்காலத்தைக் கையில் வைத்துக்கொண்டு
எதிர்காலக் கவலையில் வாழ்கிறோமே..
கடந்தகாலத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு
நிகழ்காலத்தில் வாழ்ந்திடக் கற்கிறோமா?
புரியாத இந்த புதிரைத்தான் வாழ்க்கை என்கிறோம்!
அறியாத விஷயங்களை அறிந்துகொண்டதாக நடிப்பது இங்கே அதிகம்!
தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொண்டதாக நினைப்பும் இருக்கும்!
நம்மையும் மீறி நடப்புகள் அமையும்போதுதான் - இது காலத்தின் கோலம் என்பது புரியும்!

எனக்கு கவியரசு கண்ணதாசனிடம் பிடித்த மாபெரும் விஷயம்..
ஒரு காதல்.. பிரிவு..சோகப் பாடலிலும்கூட தத்துவ முத்திரை பதித்திடும் வினோதம்தான்!

நிலவே என்னிடம் நெருங்காதே.. என்று பல்லவி கொண்டு துவங்கும் ராமு திரைப்படப்பாடல் விஸ்வநாதன் என்னும் இசை அரசனால் வார்த்தெடுக்கப்பட்ட அற்புதப் பாடல்!
கதாநாயகன் - காலத்தின் கோலமாய்க் காட்சியளிக்கிறான்!
கண்ணதாசன் வார்த்தைக் கோலங்களில் - அவன் வாழ்க்கையைக் காட்டுகிறான் முத்தாய்ப்பாய்!
அமைதி இல்லாத நேரத்திலே - அந்த
ஆண்டவன் எனையேப் படைத்துவிட்டான்!
நிம்மதி இழந்தே நான் தவித்தேன்
இந்த நிலையிலும் நீ ஏன் தூதுவிட்டாய்????????
அட.. காதலின் சோகம்.. தாக்கிய தருணத்திலே.. சிந்தனையைப் பாருங்கள்.. அமைதியில்லாத நேரத்திலே ஆண்டவன் இவனைப் படைத்தானாம்! அதனால்தான் அவஸ்தைப்படுகிறானாம்! கவிஞனே..இன்னும் இன்னும் உன்னை நான் நேசிக்கிறேன்!!

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்…. இல்லை…

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

இசை கேட்டால் புவி அசைந்தாடும்
இசையின் வலிமை என்னவென்று அந்த இறைவனுக்கும் தெரியும் என்பார்! இசைக்கு மயங்காதோர் இங்கே யார்?

ஆங்கிலக் கதையொன்றின் தழுவலாய் டால்ஸ்டாய் கதையின் தமிழாக்கம்.. கல்லூரி ஒன்றில் நடக்கும் நாடகமாக.. தமிழ்த்திரையுலகில் தவப்புதல்வன் என்கிற திரைப்படத்தில்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நிதர்சனமான நடிப்பில்.. உணர்ச்சிமிகு காட்சியமைப்பில் ., தீபங்களைத் தன் பாட்டு வரிகளால் ஒளிதர வைத்திடும் வண்ணம்.. இசை அமைக்கப்பட வேண்டும்.. வரிகள் உருப்பெற வேண்டும். பிறகென்ன.. முக்தா சீனிவாசன் தயாரிப்பில்.. உருவான தவப்புதல்வனுக்காக .. தமிழ்த்திரையின் தவப்புதல்வர்கள் கண்ணதாசனும் விஸ்வநாதனும் கூட்டணி சேர்கிறார்கள்.

இசையும் கவிதையும் பொருளை உணர்ந்து நடமாடுகின்றன பாருங்கள்! அமுதத்தமிழை அள்ளி வழங்க கண்ணதாசனும்.. இனிய இசையை மெருகேற்றித்தர எங்கள் விஸ்வநாதனும்.. இவர்தம் உழைப்பை உள்வாங்கி.. தன் குரலால்.. பாவங்களைக் காட்டி.. உயிரோட்டம் தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் - தமிழ்த்திரை வரலாற்றில் பொன்னேடு!!

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் (இசை)
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்

விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே

கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்
உன்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே
என்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்தபாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே தீபங்களே தீபங்களே தீபங்களே

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

திரைப்படம்: தவப்புதல்வன்

Saturday 12 November 2011

திரு.இரா.எட்வின் அவர்களின் வலைபூவிலிருந்து.....

தெய்வங்களுக்கு சொல்லித் தந்தவன்
பொதுவாகவே நம்முள் புதைந்து புறையோடிப் போயிருக்கும் அழுக்குப் பிடித்து வாடை வீசும் கருத்துப் படிமங்கள் நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், நாம் சற்றும் எதிர்பார்க்காத திக்கிலிருந்து நாம் கனவிலும் எதிர்பார்ப்பதற்கு அந்த நொடி வரைக்கும் நமக்கு நம்பிக்கையே தந்திராத மனிதர்களால் உடைசலைக் காணும்.

அப்படித்தான் படிக்கும் பிள்ளைகளைப் பற்றி நமக்கிருந்த ஒரு முடை நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு பொதுக் கருத்தை பேய் மழைச்சாரல் தந்த குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை தங்களது செயலால் சூடேற்றி திமிறேற்றினார்கள்.

"படிச்சவன் நடந்துக்கற மாதிரியா நடந்துக்கற", "படிச்சவன் பேசற மாதிரியா பேசற" என்கிற மாதிரி படித்தவர்களைப் பார்த்து அவர்களது பெற்றோர்களோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ அல்லது வேறு மற்றவர்களோ கோவம் கலந்த தொனியிலோ அல்லது வருத்தம் தோய்ந்தோ அல்லது ஏளனத் தொனியிலோ கூறுவதைக் கேட்டிருப்போம்.

படித்தவன் எப்படி பேச வேண்டும்?.
படித்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு தெளிவான ஒத்தக் கருத்து எந்த சமூகத்திலும் இந்த நொடியில் இருப்பதாகப் படவில்லை. இதில் இவ்வளவு தயங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றே படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான ஒத்தக் கருத்தினை நோக்கி எந்த சமூகமும் முதல் எட்டெடுத்துக் கூட வைக்க வில்லை என்று யார் வேண்டுமானாலும் என் தலையில் அடித்தே சத்தியம் செய்யலாம்.

படித்தவன் அதிர்ந்து பேசக் கூடாது. படித்த தமிழனென்றால் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தை நுனி நாக்கில் உளற வேண்டும். நாம் உண்டு நம் வேலை உண்டு என்பதை உணர்ந்து உள் வாங்கி செயல்படுத்த வேண்டும். அவனவன் அவனவன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டாலே போதும். நாடு தானாக வளப் படும்.

அமெரிக்காவில் மக்கள் தெருவிலே வந்து பெரு முதாளிகள் அரசியலைத் தீர்மானிப்பதை எதிர்த்து போராடுகிறார்களா? அது பற்றி உனக்கென்ன? அது அவன் நாட்டுப் பிரச்சினை. இலங்கையில் கொத்துக் கொத்தாய் கொல்கிறானா?, அறுப்பதற்காகவே வளர்க்கும் செம்மரிகளைக் கூட மூங்கில் பட்டியில் அடைத்து, பகல் வேலையில் அவற்றை சுதந்திரமாய் காலாற மேய வைக்கும் தமிழனை முள் வேளியில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்கிறானா? விடு அது அவன் உள் நாட்டுப் பிரச்சினை.

எவ்வளவுதான் பாதுகாப்பாய் தப்பிவிட முயன்றாலும் ஈரம் சுரக்கிறதா?. அது தவறு. உடனே ஏதாவது ஒரு வட நாட்டு சேனலை போட்டு மேதைகள் ஆங்கிலத்தில் அலசுவதைப் பார். எந்த விதமான மனித ஈரத்தையும் அவர்கள் உலர வைப்பார்கள். அதையும் மீறிப் பொங்கினால் அவர்களுக்காய் பிரார்த்தனை செய்.

இதைத் தாண்டி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர். இந்த உணர்வுதான் ஞானத்தின் தொடக்கம். தர்க்க நியாயம் பேசுபவர்களிடம் காதைத் தராதே. அவர்கள் தீவிரவாதிகள். உன்னை நம்பி குடும்பம் இருப்பதை உணர். நீ அயோகியத்தனம்செய்யாமல் யோகியனாய் வாழ். இதைத்தான் ஆகப் பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமும், நண்பர்கள் நண்பர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுதானா படிப்பின் விளைவு?

படித்தவன் யோக்கியனாய் மட்டும் இருந்தால் போதுமா? ஆதிக்க சக்த்திகளின் அத்து மீறலை, அயோகியத் தனத்தை பார்த்து மௌனிப்பதும் அயோகித்தனம் அல்லவா?

ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கொஞ்சி மகிழ்ந்து சந்தோசித்து இருப்பது குடும்ப விவகாரம். அதில் நாம் தலையிடக் கூடாது. ஆனால் குடித்துவிட்டு வந்து மனைவியை துவைக்கும் கணவனைத் தட்டி கேட்காமல் ‘இது அவர்கள் குடும்பப் பிரச்சினை’ என்று ஒதுங்கினால் அது அயோக்கியத் தனம் அல்லவா?

நல்லாப் படி, நன்கு சம்பாரி, சந்தோசமாய் குடும்பம் நடத்து என்பதைத் தவிர வேறு எதையும் நாம் கற்றுக் கொடுப்பதில்லையோ? மதிப்பெண்கள் தாண்டி சமூக அக்கறையே இல்லாமல் பிள்ளைகளை உருவாக்குகிறோமே... என்று நொந்து நூலாகிப் போன என்னை "அப்படியெல்லாம் இல்லை. உங்களது கழுகுப் பார்வைக்குப் படாமல் ஈரத்தை எங்கள் நெஞ்சிலே பத்திரப் படுத்தி வைத்திருக்கும் நாங்களிருக்கிறோம் . நம்பிக்கையோடு இரு" என்று சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலேனும் தேர்ச்சி பெறாத, ஆசிரியர்கள் அதிகம் நம்பிக்கை வைக்காத நான்கு மாணவர்கள் தங்களது மகத்தான செயலால் அறைந்து சொன்னார்கள்.


அன்று காலை தீபாவளிக்கு ஒரு நாள்தான் விடுமுறை என்று பள்ளிகளுக்கு வந்த உத்தரவு மாணவர்களையும் ஆசிரியர்களையும்கொஞ்சம் வருத்தப் பட வைத்திருந்தது. பொதுவாகவே தீபாவளி முதல் நாளே தொடங்கி அதற்கு அடுத்த நாள் வரைக்கும் நீளும். பல ஆசிரியர்கள் என்னை அணுகி, “ தலைவர்ட்ட கொஞ்சம் பேசுங்க சார். வியாழன் ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு அதை ஒரு சனிக்கிழமை பள்ளி வைத்து சரி செய்து கொள்ளலாம்” என்றார்கள்.

கோவப் படுவாரோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். பள்ளி விட்டிருந்தது. குடையோடு, மழைக் கோட்டோடு வந்திருந்த பிள்ளைகள் போய் விட்டார்கள். சில பிள்ளைகள் மழைக்கு அங்கும் இங்குமாய் ஒதுங்கியிருந்தனர்.

நமக்கு தீபாவளியில் உடன்பாடு உண்டா இல்லையா? நாம் கொண்டாடுகிறோமா, இல்லையா? என்பதை எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிற தருணம் இதுவல்ல. அதற்கான அவகாசமும் இப்போது இல்லை. சக ஆசிரியர்களின் மன நிலையை, அவர்களது கோரிக்கையை, அதில் உள்ள நியாயத்தை, தலைமை ஆசிரியரிடம் அவ்ர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது அவர் மனம் நோகாமல் பக்குவமாய் எடுத்துக் கூறி , அவர்களது கோரிக்கையை சேதாரம் இல்லாமல் வென்றெடுக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவரது அறைக்குள் நுழைந்தேன்.

எனக்கு அந்த வேலையை தலைமை ஆசிரியர் வைக்கவே இல்லை. நான் உள்ளே நுழைவதைப் பார்த்தவர் , “வா எட்வின், உன்னை கூப்பிட பிரிட்டோவை அனுப்ப இருந்தேன். நீயே வந்துட்ட . வா, உட்கார்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, தீபாவளிக்கு அடுத்த நாள் விட்டுட்டு அதை பிறகு ஒரு சனி கிழமை பள்ளி வைத்து சரி செய்துக்கலாம்னு படுது. என்ன சொல்ற?”

“அதுதாங்கண்ணே சரி.

பேசிக் கொண்டிருந்த போதே பலத்த சத்தத்துடன் இடி ஒன்று இறங்கியது. வெளியே திண்ணைக்கு ஓடி வந்தோம். பத்துப் பதினைந்து பிள்ளைகள் நின்று கொண்டிருந்தார்கள். விடாது பெய்து கொண்டிருந்தது. இடியினால் பள்ளிக்கு எந்த சேதமும் இல்லை. அப்பாடா என்றிருந்தது.

உள்ளே போகலாம் என்று நாங்கள் எத்தனித்த போதுதான் அது நிகழ்ந்தது.

எங்கள் பள்ளி சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எங்கள் பள்ளிக்கு நேர் எதிர்த்தார்போல் வாகனங்கள் u டேர்ன் போட வசதி உள்ளது.

கடைவீதியிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மீண்டும் கடைவீதிப் பக்கம் திரும்ப சென்னைலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த மகிழுந்து அவனை இடித்து விட்டு நிற்காமல் பறந்துவிட்டது. அந்தப் பய்யன் பறந்து போய் அந்தப் பக்கம் விழுந்ததை கண்ணாரப் பார்த்தோம்.

அப்படியே உறைந்து போனோம்.

பள்ளிக்குப் பக்கத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாய் ஒரு சின்னக் கூட்டம் பள்ளியில் கூடிவிட்டது. ஆளாளுக்கு கார்க்காரனை வைது கொண்டிருந்தார்கள். வகை வகையாய் சிலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்.

எப்போது தங்கள் முதுகளில் தொங்கிய பைகளை இறக்கினார்கள்? எப்போது இறங்கி ஓடினார்கள் என்றெல்லாம் யூகிக்க வாய்ப்பே தரவில்லை. பதினோராம் வகுப்பு பிள்ளைகள் நான்கு பேர் அவனைக் கொண்டு வந்து பள்ளி வராண்டாவில் கிடத்தினார்கள்.

பின் மண்டை சின்னதாய் பிளந்திருந்தது. ரத்தக் கசிவு அதிகமாய் இருந்தது. கசிவு என்பது கூட கஞ்சத்தனம்தான். ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரில் ஒருவன் தனது ஈரச் சட்டையை கழட்டி ட்ரத்தம் வரும் இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

எந்த ஊர்ப் பையன் அவன் என்று யாருக்கும் விளங்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. ஒருவன் என்னிடம் வந்தான்.

“கொஞ்சம் செல்லைக் கொடுங்க சார்.”

கொடுத்தேன்.

நூற்றி எட்டை அழைத்தான். அந்த நொடி வரைக்கும் இது அங்கு நின்ற நான் உள்ளிட்ட பெரியவர்கள் யாருக்கும் தோன்றாத ஞானம்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்தது.

ஏற்றினார்கள். யாரேனும் கூட வந்தால்தான் நன்றாயிருக்கும் என்றார் ஓட்டுநர். எதை பற்றியும் யோசிக்காமல் ஒருவன் ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

“ போயி என்னன்னு போன் பன்னு மாப்ள, நாங்க வீட்டுக்குப் போயி அம்மா வந்ததும் ஏதாவது சூடா எடுத்துட்டு வரோம். நீ அங்கேயே இருடா”

சொல்லிக்கொண்டே சட்டையைப் பிழிந்தான். ரத்தமாய் கொட்டியது. எந்த அசூசையும் இல்லாமல் அதைப் போட்டுக் கொண்டான். மழை சன்னமாய் விட்டிருந்தது. மூவரும் எதுவுமே நடக்காததுபோல் கிளம்பிவிட்டார்கள்.

நீராளர் வேலுவின் மருமகள் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து வராண்டாவைக் கழுவி விட்டாள்.

அண்ணன் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார். அவரைத் தேற்ற வேண்டும்.

தெய்வம் எதுவுமில்லை என்பதில் நமக்கு தெளிவு உண்டு.

உயிரை காப்பது தெய்வக் குணம் என்கிறார்கள்.

எனில் அடிபட்ட பிள்ளையின் உயிரைக் காக்கப் போராடிய என் நான்கு பிள்ளைகளும் தெய்வங்கள்தான்.

அவர்கள் தெய்வங்கள் எனில் நான்?

நான்....

தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்.

Monday 7 November 2011

ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...


தவழ்ந்திடும் தென்றலை
தவமிருந்து கேட்கிறேன்
தர ஏனோ மறுக்கிறாய்
இறைவா....?

மழலை ஒன்றை
மார்பேந்திட
நெஞ்சம் ஏங்கி தவித்திட
வஞ்சம் ஏனோ செய்கிறாய்
இறைவா...?

கல்லறை ஆக்கிவிட்டாய் - என்
வாழ்வுதனை
கண்ணீராய் ஏனோ மாற்றிவிட்டாய்
கருப்பையில் ஏனோ ஈரமில்லை
இறைவா...?

மலடி என்ற
மாறா பட்டம் மறையாதோ
மழலை ஒன்றை - நான்
மடியேந்த மனம்
மாறமாட்டாயோ....?

குருடியாய் இருந்தாலும்
குழந்தையில்லை எனில்
குருடி என்று
யார் அழைப்பார்
அழைப்பதெல்லாம்
மலடிதானே...

கருங்களாய் இருந்தாலும் நீ
கற்பகிரகத்தினுள்ளே தான்
இருக்கிறாய் - பின்
இருளை தந்து எனக்கு மட்டும்
வஞ்சனை ஏனோ செய்துவிட்டாய்...

இறைவா
உனக்கு கருணை வருமோ- என்
கருவறை நிறைந்திடுமோ
கரும்புள்ளி நீங்கிடுமா...?

Sunday 6 November 2011

திரு நங்கை...

படைத்தவனே
ஏன்
உன் படைப்பில் 
இத்தனை ஓரவஞ்சனை...


எல்லாம் 
அறியும் நீ...


ஆண்பெண்
என்று மட்டும் நிறுத்தாமல்
திருநங்கைகளை உண்டாக்கி
அனலில் இட்டாய்...


உணர்வுகளை 
மறைத்து .... உருவங்களை 
திருத்தி - பாவம்
இப்படி ஒரு பிறவியை
எதற்கு
எழுதித் தொலைத்தாய்....


காண்கிற போதே
ரணமாகிறது
கண்கள்...


சமூகம் அவர்களை
சாட்டையால் 
அடித்து
சந்தியில் நிறுத்தி
சிரித்தும் பார்க்கிறது...


ஓரமாய்
ஒதுக்கி - ஊருக்கு
வெளியே 
விரட்டி விட்டாலும்
திருநங்கைகள் எல்லாம்
ஒன்றாய் கூடி -கைதட்டி
உனக்கு 
அச்சதையல்லவா
போட்டுப் பார்க்கிறார்கள்...


உருவம் 
மட்டும் மாறியதல்ல 
உள்ளமும் உள்ளே
வெந்த தளும்புகளை
வெளியே மறைக்க
கைதட்டி பாடும்
திருநங்கைகள் எல்லாம்
அனைத்துக்கொள்வோம்!


ஆறுதலான
கரங்கள் நீட்டி
அருகில்
அவர்களை அமர்த்தி
சரியாய் உரிமையை
பகிர்ந்து கொடுப்போம்


ஆண், பெண் ,திருநங்கை
சாதி மூன்று -என
சத்தமாய் சொல்லி
திருநங்கைகள் காதில்
தேன் ஊற்றி
பார்போம்...

Friday 4 November 2011

வான் பறவைகள் ......

                  
பறவைகளும் நாங்கலும் 
ஒரே சாதி...
 பரதேசம் பறப்போம்
ஆகாயத்தில் அன்றாடம்


ஆர்வம் உறுத்தியதால்
ஆகாயம் தொட்டு
உயர பறந்தோம்
சிறகுகளின்றி...

சிக்கன சிரிப்புகள்
சில்லறைகளாய்...

வருபவர்களை
வரவேற்பதே எங்கள்
வாடிக்கை
வாழ்க்கையில் 
நகைப்பதே மறந்தோம்
நிஜ வேடிக்கை...

வேடர்களின் பார்வை
வித்யாசம் ஏராளம்
விழிகள் விழுங்கும் 
வீழ்ந்தால் நிச்சயம்...

காணும் கண்களுக்கு 
தாயும் நாங்கள்
தாதியும் நாங்கள்

முள்ளில் மேடைகள்
பாதங்கள் பழகின
பறந்தே ஆடினோம்
நளினமாய்
 நாட்டியம் ஆடும் 
நர்த்தகிகள் நாங்கள்...

உற்றார் போல
உவந்து உபசரிபோம்

மது கேட்க்கும் மனங்களுக்கு
கோப்பையில் திரவம் 
கொஞ்சும் புன்னகையில்

சிறுமூளை சட்டென 
சிலிர்க்கும்
மதுகுப்பியை
மாதுக்கள் நாங்கள்
கொடுத்ததால்...

வானத்தில் வாழும் 
வான்மதி நாங்கள்
வான வாசலில் 
நீச்சலடிபோம்
நிலவைபோல
விண்மீனை விடுத்து
வீரத்தோடு நாங்கள்...
வின்னிலிருந்து
மண்ணில் வருவது
மறுஜென்மம் தான்...
அன்றாடம் நாங்கள் 
கர்ணம் போடுகிறோம்
உணர்வுகளை மறந்து..

வான ஊர்தியில் வாழ்க்கை
ஊர்வலம் வந்தோருக்கு
வாழ்துக்கள் கூறி...