Wednesday 31 October 2012

ஊருக்கு...



நீ
நடக்கிற
பாதைகளில்
கிடக்கிற கற்களெல்லாம்
தடைகள் என்றால்
ஊர்போய்
சேர்வாயோ?...

உன் வழி நெடுக
சிதறிய மணமெல்லாம்
நீ
நடந்து பொடித்துபோட்ட
கற்கள்தானே...

போகிறைட்த்தை
மனதில் நிறுத்து
பாதையில் துணைக்கு
படைத்தவனை
கூப்பிடு...

வந்ததின்நோக்கம்
சரியாய் செய்ய
போகிஇடம்
தானாய்புரியும்...

தரித்திரியம் எல்லாம்
தேடி தொடை
திருடனை
தேடிபிடித்து
தேரிழுக்க பழக்கு...

தர்மம்செய்ய
சத்திரம் கட்டு
தேசம் முழுதும்
அன்புகொடி நாட்டு...
தேவையுள்ளவனுக்கு
கூப்பிட்டு கொடு...

தேகம் இறுத்தி
சமாதிசெய்து
புத்தியைசெலுத்து
தானாய் நீயும்
ஊர்வந்து சேர்வாய்...

விருந்து வைத்து
காத்துகிடக்கிறான்
படைத்தவன்
உனக்காய்
வந்த்தின் நோக்கம்
சரியாய் செய்தால்...



என்றும் அன்புடன்
கலைச்செல்வன்


Tuesday 30 October 2012

மறுமணம்...



கரும்பலகை அல்ல
என் இதயம்
எழுதியதை அழித்துவிட்டு
புதியது எழுத...

குருதியில் கலந்து
இரத்தநாளங்களில்
சீராய் ஓடும்
என்னவனின்
இரகசிய நினைவுகள்

சுகங்களை பறிமாறி
சரியாய் பகிர்ந்து
எனக்கு அவனும்
அவனுக்கு நானும்
விருந்துண்டு களித்தோமே...!

எனக்குள் குணிந்து
என் தேகம் பார்க்கையில்
என்னவன் ஸ்பரிசித்த
அவன் விரல்களில்
நடந்துபோவது
இப்போதும் தெரிகிறது...

என் கூந்தலை நுகர்ந்து
அவன்
நாசியின் நுனி – என்
தேகத்தில் ஓடிப்பதித்த
பதிவுகள்
இன்னும் மாறலயே...

ஆழமாய்
முத்தித்து பதித்த
அவன்
அதரங்களின் அடையாளம்
இன்னும்
கிடக்கிறது...

அழுத்திபிடித்து
நெருங்கிய
அவன் கரங்களின்
அழுத்தம் இன்னும்
அழகாய் – என்
இதயம் நினைக்கிறது...

சமூகமே!
பூவையும் பொட்டையும்
பறித்துக்கொண்டு
வெள்ளைபுடைவை
உடுத்திப்பார்...
பரிகசி- பரவாயில்லை

ஆயின்
எனக்குள் எனக்காய்
நான்
எழுதிய நினைவுகளை
கலைக்க முயற்சித்து
தோற்றுபோகாதே!!

மணம் பேச
வாருங்கள்
மாண்ட என்கணவன்
மறுபடி வந்தால்
மட்டும்...

கரும்பலகை
அல்ல
என் இதயம்-எழுதியதை
அழித்துவிட்டு
புதியது எழுத...

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.



Monday 22 October 2012

தோல்வியில் உதவி...


உலக நாடுகளே
சமாதான புறாக்களை
பறக்கவிடுங்கள்

போராடி போராடி
பஞ்சத்தில் கிடக்கும்
நாடுகளாவது
அடித்து சாப்பிட்டடும்

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

மோசடி...



மணவறையில் வீற்றிருக்கும்
மணாளனே!!
என்
காதலியின் உயிர்
என்னிடம் அல்லவா இருக்கிறது...

அவள்
சவத்தை வைத்து
எப்படி
சுகத்தை காண்பாய்??

உனக்கு
உடல் வேண்டுமானால்
வெட்டியானிடம் போயிருக்கலாமே..?

ஏன்
எனக்குறியவளை
கைபிடித்து
நீ மோசம் போனாய்?

பாவம் நீ...!!!
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

நம்பிக்கை துரோகம்...



இருபது வருடம்
மூடிகாத்த
தன் நிர்வாணத்தை
முதல்நாள் இரவில்
உனக்கு
திறந்து காட்டிய
உன்
மனைவியை
தள்ளிவைத்தாயே !

வரதட்சனையை
காரணம் காட்டி
துரோகி...                                                         என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

பேனா...


கழுத்தை பிடித்து
தலைகீழ் நிறுத்தி
உதிரம் முழுதும்
தீரும்வரை
ஒரு கொலை...

உன் சவம் போனாலும்
உயிர் இருக்கும்
ஏடுகளில்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

ஏக்கம்...


சோப்பு நீர் தெளித்து
குளிப்பாட்டி
வெல்வெட் துணியால்
துடைத்து...
துணிபோட்டு
வாகனத்தை மூடிவைத்தான்

பரட்டை தலையோடு
சட்டையில்லாத – அந்த
ஏழைசிறுவன்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

தாராளம்...


பக்தன்
மொட்டையடித்து
கடவுளுக்கு காணிக்கை
செலுத்தினான்
வேண்டுதல் நிறைவேற
மீண்டும்
முடிவளரும் என்பதால்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

தியாகி...


உனக்கு
சாமரம் வீசுகிறேன்
நீ!
என்னை ஆணி அடித்து
தொங்கவிட்டு
சுத்தலில் விட்டாலும்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

பகல்கொள்ளை...


கால்களை
கட்டிப்போட்டு-நான்
கதற கதற
என் மடியில்
கை போட்டு
கறந்து கொண்டிருந்தான்
பால்காரன்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

அந்தி மாலை...


ஏ ! வானமே
இன்றும்
உன் காதலி
தாமதமாகத்தான்
வருவாள்...
ஏன்
கோபப்படுகிறாய்?
சிவந்துகிடக்கிறது
உன்முகம்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

புண்ணியம்...

செத்துப்போனால்
உன்னை
புதைக்கச்சொல்
புழுக்கள்வயிறார
சாப்பிட்டடும்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

ஏற்றதாழ்வு...

உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
நாய்கூடபார்ப்பதில்லை...
ஈன்றகுட்டிகள்
பன்னிரெண்டும்
பாலைகுடிக்க
மடிகாட்டும்...

வண்ணம் மாறி
இருந்தாலும்
பிறந்தகுட்டிகள்...

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்