Wednesday 19 December 2012

பரிசுத்தர்...

பிரபஞ்சம் முழுதும்
செதுக்கிய சிற்பி
செல்லப்பிள்ளையாய்
படைத்தவன்
மடியில்...

என்பாவம் போக்கிட
தகப்பன் அனுப்பிய
ஆண்டவர் அவரை...

முள்ளாள்
கிரீடம் செய்து
அழுந்த பதித்து
சிரசில் வடியும்
குருதியைப் பார்த்து
ரசித்தேன்...

தேவமைந்தனாம்
கடவுள் இயேசுவை
காரி உமிழ்ந்து
காலால் உதைத்து
தரையில் தள்ளினேன்...

கழுமரத்தில்
மகா புனித்தை
ஆணிகளால் அடித்து
தொங்கவிட்டுச்
சிரித்தேன்...

காய்கிற வெயிலில்
சட்டையை உரித்து
அலங்கோலமாக்கி
வேடிக்கை
பார்த்தேன்...

ஜீவ நீர் தந்த
தூயவர் அவரை
தாகமாய் கிடந்து
சாவதைப் பார்த்து
சந்தோஷித்து
நின்றேன்...

நேர்த்தியாய் செய்த
முள்ளாள் ஆன
சாட்டையால் அடிக்க
தெரிக்கிற உதிரம்
முகத்தில் பட்டு
சிரித்து மகிழ்ந்தேன்...

அத்தனை பாவமும்
என்னிலும்
என்
சந்ததி மேலும்
விழட்டும் என்று
சத்தியம்
ஏற்றுக்கொண்டேன்...

கூரிய ஈட்டியால்
குத்திய விலாவில்
வடிந்த
இரத்தமும் நீரும்
சிந்திய போது
பூமி முழுதும்
குலுங்க அழுதது...

அந்தகாரம்
பூமிமுழுதும்
ஆக பரவி
இயற்கையெல்லாம்
மௌனமாய்
இருந்தது கண்டு
உள்ளுக்குள் பயந்தேன்...

இத்தனை
கொடுமை நான்
செய்தும்...
எனக்காய் ஜெபிக்கிற
இயேசுவே!

என்பாவம்
போக்கிட
பலியாய் வந்த
உம்மை கொன்று
இன்னும் பாவம்
கூட்டிச்சேர்த்தேன்...

என் பிணி சுமந்து
பசி அது போக்கி
தொழுநோய் தொட்டு
தூர விரட்டி
முடங்கிய கால்களை
நடக்க விட்டு
குருட்டுக்கண்களை
பார்க்கச்செய்து...

இத்தனை புதுமை
எனக்கு
நீர் செய்தும்
எத்தனை கொடுமை
உமக்கு நான்
செய்தேன்...

சாம்பல் தடவி
சாக்கு உடுத்தி
மண்ணில்
உருண்டு பிரண்டு
அழுதாலும்
போகாதய்ய
நான் செய்த பாவம்

ஆண்டவர் இயேசுவே
என்மேல் இரங்கும்
பாவி என்மனதில்
உமது ஆவியை
ஊற்றி
பாவம் கழுவ
சுத்தம் நான் ஆவேன்...

அடித்த ஆணியின்
தழும்புகள் தெரிய
உயிர்த்த
என் இயேசுவே
மீண்டும் வருவார்

மகிமையின் நாதரை
என் ஜீவ நேசரை
ஆசையாய்
வரவேற்று மகிழ்வேன்

இயேசுவின் நாமம்
இனிதான நாமம்
இன்ப நாமம்...!!!




Monday 17 December 2012

பெண்ணே...


நீ
அஸ்திவாரம்
நீ தான் ஜனனம்
இல்லாது போனால்
ஏது
ஜனம்...

சுமைதாங்கியே
நீயும் இலைப்பாறு
பாரமாய் சுமந்து
சோர்ந்துபோக
உனக்கு மட்டும்
குத்தகையா என்ன?

எழுந்து நட
மேலே உயரமாய் நட
வழுக்கிற பாதங்களில்
பசைகள் தடவி...

அழகு மட்டும்
பெறுமையல்ல
ஆளக்கற்று பார்
நீயும்...

அதிகார நாற்காலிகளில்
உட்கார...உட்கார...
வளர்ந்து கொண்டே
போ...

அழகுக்கு மட்டும்
பெண் என்ன
காட்சிப்பொருளா?

கடவுளை கேட்டுப்பார்
உன்
படைப்பின் ரகசியம்
காதில் ஓதப்படும்...

காத தூரம்
ஓடிப்போகும்
விடிக்காளன்கள்...

கவலைஎன்பதை
விற்றுவிடு
நாளுக்குநாள்
உனக்கு மட்டும்
திருவிழா...

நீ இல்லாது போனால்
நில்லாது உலகு

மானிடம் முழுதும்
மலரட்டும் உன்னால்...

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்





Sunday 16 December 2012

நிஜம்...

காதல் வயப்படுதல் தேவை
கனவுகள் காண்பது சுகம்
நிஜங்களை சந்திக்கும் போது...???

மேலே உள்ள
பொய்யானதெல்லாம்
மனதுக்கு தருவது ரணம்
எல்லாம் பொய்...

நிஜம் எது?
நிஜம் எதெல்லாம்
கஷ்ட்டத்தை தருகிறதோ அது...
எதெல்லாம் உன்னைவிட்டு
விலகி போகிறதோ அது...

எதெல்லாம் உதட்டால்  சிரித்து
கையை அகல விரிக்கிறதோ
அது...
எங்கெல்லாம்
வறுமை இருகிறதோ அது...

இவையெல்லாம்
இதய்மிருந்தால்
காண்பது மனம்
நிஜம்...

சுகமானது
பாரங்களை சுமப்பது.
காயங்களுக்கு மருந்திட்டு
வேதனையை குறைப்பது
எப்படியோ
அப்படிதான் நேசிப்பதும்...

அன்புசெய்தல்
முகம் தெரியாதவனுக்காய்
முதுகில் அடிபடுவது

பசியாய் இருப்பவனுக்கு
ஒருவாய் உணவு...

உடுக்காதிருப்பவனுக்கு
உடுத்திப்பார்ப்பது...

வியாதியாய் இருப்பவனை
விசாரிப்பது...

விபச்சாரமில்லாத
வாழ்வில் உடையவளோடு
உறவு காண்பது...

ஆஹா ...!ஆஹா...!!!

எத்தனை சுகம்
வாசிக்கும் போதே
எத்துனை அழகு
எழுதும் போது

இதுதான் நிஜம்...

நிஜம்
நேசித்துப்பார்
நீயும் உணர்வாய்
கடவுளை தேட -
இப்படித்தான் காண்பாய்

வேறு வழியே இல்லை
கடவுளை தேடி ஓடி
இளைத்துப்போகாதே...

நிஜத்தை நோக்கி ஓடு
விலகிப்போ...
பொய்யை விட்டு
தூரமாய்...

இடைவெளி விடாமல்
அன்புசெய்
இறுகப்பிடித்துக்கொள்
நீயும் கடவுளாவாய்
சக்தி பெருகும்
மனம் பெலப்படும்...

நீ
செய்வதெல்லாம்
வாய்க்கும்...
நீ
அன்பு செய்
உன்னை நீ தான்
வெற்றி கொள்ள வேண்டும்.

அன்பு செய்வோம்
ஆணந்தம் கொள்வோம்
எல்லோரும் நமதாய்...

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்


Tuesday 11 December 2012

நிலாப்பெண்ணே...

கள்ளச்சிரி
சிரித்தாள்...

உமிழ்ந்து
துப்பிய ஒளிக்கீற்றுகளை
மேலே பூசிக்கொள்
பூமி,
அண்ணாந்து பார்த்தது
அகல வாய்திறந்து...


ஓவியன்
காத்துக்கிடந்தான்
கவிஞன்
காலகாலமாய்...
நல்லவனும் ஏமாந்தான்
கஷ்டகாலம்...

மணமகன் கோலத்தில்
கோட்டானும் ஆந்தைகளும்
வௌவாலும்...
விஷங்களெல்லாம்
வீரியமாய்...

காதலிக்க
இரவில்
ஊர்வலமா வருகிறாய்...??

ஊர் உறங்கிய பின்
உத்தமி
வெளியே வருவாளா?

விரிந்த அகல
மேகங்களே
சாலைகளை
மூடிக்கொள்ளுங்கள்
உலா வருகிறாள்
வெள்ளைப் புடவைக்காரி
வியாபாரம் பேச...

நல்லவர்கள்
உறங்கட்டும்
நீ போ...

அமாவாசை
எங்களுக்கு
பழகிப்போனதுதானே!

யாரிடமாவது
அங்கிகளை
கடன்கேட்டு - உன்
முகத்திற்கு
முக்காடிடு...

இருட்டில் நீ வந்து
எங்கள்
உள்ளங்களை
கருப்பாக்கிப் போகாதே...!!!

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்



Monday 10 December 2012

உறவுகள்...

குடும்பம்
இனிமையானது
உறவுகள் தேவையானது
இந்த பிறப்பு
உனக்கு
சகோதரன்,சகோதரி
தாய் தகப்பன்
அனைத்தும் தாங்கி
 உன்னை தனியாய் விடாமல்
உனக்காய் அழுதும்
சிரித்தும் சுமந்தும்
நெருக்கி
அனைத்துக்கொள்ளும்
ஒரு சங்கிலி
யார் கட்டுவார் இனி...

நீ
மரித்துபோனால்
மீண்டும் காண்பாயோ!
இருக்கிறபோது
உபயோகித்துப்பார்...

உன் தம்பியை அதட்டு
தவறு செய்கிற காலகளை
பிரம்பால் தட்டு...

அன்பு செய்
சகோதரியோடு- பொய்யாய்
சண்டையிடு
சமாதானம் செய்துபார்...
அலாதி சுகம்...

அம்மாவின் கைகளில்
படுத்துகிட
அப்பாவின் தோளை
உன் தலைக்கு கொடு...

ஆஹா உறவுகள்
பாலம் என்றால்
உண்மை தானே...

மரணம் சந்தித்தால்
அடுத்து பிறக்கும்
ஆத்மா இத்தனை
சொந்தங்களை
நினைத்துப்பார்க்குமா?

அறிவே யோசி...
இருக்கிற உறவுகளில்
உண்மையாய்
நேசிப்பை பார்...
நேசித்துப்பார்...

பிரம்மச்சாரியாய் இருப்பது
உனக்கு மட்டும்தான் சுகம்
சம்சாரியாய் இருப்பது
உனக்கு மட்டுமல்ல
இருக்கிற உன்
உறவுகளுக்கும் சுகம்...

எதில்
பிரியப்படுகிறாய் மணமே
ஒருமையல்ல
பன்மைதான் பலம்...

ஒருமையல்ல
பன்மைதான்
ஆணந்தம்...

குடும்பமே குதூகலம்...

சண்டையிடாதே
பொய்யாய் இருந்தால்
சுகம்...

இதில் மட்டும்
உண்மை வேண்டாம்
நான்
உறவுகளோடு  இடும்
சண்டையைச்சொன்னேன்
சரிதானே...???!!!

என்றும் அன்புடன் 
கலைச்செல்வன்






இல்லை...இல்லை...


ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்...
ஏழை சிரித்தால்
இறைவனை கண்டதாய்
சாட்சி உண்டோ...
காலணா காசுக்கு வழியில்லை
காலில் அனிய செருப்பில்லை
குத்தினால் கல்லும் முள்ளும்
அதுக்கும் பொறுப்பில்லை...
சாப்பிட வயிற்றுக்கு
உணவில்லை...
படுக்க கட்டிலில்
கயிறில்லை...
காலையில் எழுந்ததும்
கடன் தொல்லை...
எங்களிடம் உள்ளதெல்லாம்
இல்லை...இல்லை...
இல்லை...
வீட்டில் குடிக்க
கஞ்சியுமில்லை
குளிக்கப் போனால்
குழாயில் தண்ணீருமில்லை...
கிணற்றுக்குப் போனால்
வாளியே இல்லை...
குளித்துட்டுப் போனாலும்
குளிக்காமல் போனாலும்
வேலை காலி இல்லை...
படிக்கிற வயசுல
இருக்கிற பிள்ளையை
பள்ளிக்கு அனுப்ப
துட்டுமில்லை...
வலுத்தவனிடத்தில்
உதவிக்குக் கைநீட்ட
நாய்போல் ஆட்ட
வாலில்லை...
அப்படி இப்படி
வண்டிய இழுத்து
மாடாய் வாழ்வை கழிச்சாச்சு...
கனவுகள் கண்டு
நாளாச்சு...
கட்டையும் போகிற
வயசாச்சு...
ஏழையின் வாழ்வில்
சுத்துது சக்கரம்
அப்படியே...
என்
பிள்ளையும் வருவான்
இப்படியே...


என்றும் அன்புடன் 
கலைச்செல்வன்




Saturday 8 December 2012

சாரல்...

சொட்டுச் சொட்டாய்
மேகம் சிந்த
காற்று அடித்து
ஒரு
மழை நீர் ஆட்டம்...

இலைவழி வடியும்
மழை நீர் குளித்து
செடிகள் ஜொலிக்கும்...

மூங்கிலில்  வழுக்கி
மழைநீர் சறுக்கும்...

மலர்களின் முதுகில்
வண்டுகள் அமர்ந்து
ஈரம் துடைக்கும்...

புல்வெளி எங்கும்
மழைநீர் பூக்கும்...

ஜடைகள் அவிழ்த்து
மழைநீர் அசைய
மழைநீர் தெரித்து
பூமி குளிரும்...

சாரல் மழையில்
மன்மதன் தவளை
இன்னிசை எழுப்பி
சுயகொலை செய்யும்...

வாத்துகள் கூட்டம்
கழுத்துகள் நீட்டி
குளத்தில் விழுந்த
புள்ளிகள் தேடும்...

குட்டி குட்டி
மீன்கள் எல்லாம்
நேராய் நின்று
மழைநீர் பருகும்...

எத்தனை ரம்யம்
சின்ன சின்ன
முத்துகள் வீசி
மேகமும் காற்றும்
ஆடிப்பாக்கிற
மழைநீர் ஆட்டம்...

எட்டிப் பிடிக்கிற
உயரத்தில் இருந்தால்
மேகமே உன்னை
கட்டிபிடித்து
முத்தம் தருவேன்...!!


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்




விரட்டு...



சாம்பலாய் போகும்தேகம்
அணலில்வெடித்து
சிதறும் நரம்புகள்
எழுந்து அடங்கும் எலும்புகள்
வெந்துமடியும்
மண்ணோடு மண்ணாய்...

கூடுவிட்டு
ஓடிப்போகும் – உன்
ஓடுகள் மட்டும் – மண்டை
ஓடுகள் மட்டும்
நினைவுச்சின்னமாய்...

அழியப்போகிற தேகமே
ஆணவம் – பெருமை
கர்வம் – அகம்பாவம்
எல்லாம் எங்கே
தேடிப்பார்...

பிறக்கிற போதே
சுமந்து வந்தாயா – அல்ல
உன் தாய் தந்தை
தைத்துப்போட்ட உன்னை
நிமிர்ந்து நிறுத்திய
ஆத்மாவை திரும்பி பார்...
ஓடிப்போகும் – இது
ஓடிப்போகும்...

இருக்கிறபோதே
ஒளியை உனக்குள் வரவிடு 
காரிருள்
புகாதபடி திறந்துவை
வெளிச்சம் வரட்டும்
காண்கிற
கண்கள் கூசட்டும்...

இருட்டில் இருப்பது
சைத்தானுக்கு மட்டும் பிரியம்...

சைத்தான் என்ன
நீட்டிய நாக்கும்
கூறிய நகமும்
விரிந்த மயிறும்
பெருத்த வயிறும் கொண்ட
பயங்கரமா...?

இல்லை
ஆணவமும் பெருமையும்
அகம்பாவமும்
மறுபெயர் தாங்கி
இங்கு சைத்தானாய்

விட்டு அறு
விரட்டு ... ஓடட்டும்...
ஒளியை தேடு
திறந்து வை...
இதயக்கதவுகளை
அகலமாய்..

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

Tuesday 4 December 2012

பாலாறு


அபுதாபி தமிழ்ச்சங்கம் 07.12.2012 அன்று நடத்த இருக்கும் கவியரங்கத்தில் திரு.நெல்லை கண்ணன் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திருமதி.இராஜி இராஜேந்திரன் அவர்களுக்காக எழுதி கொடுத்தது.


ஆன்றோர்கும் – மிகப்பெரும்
சான்றோர்கும்
அவையோருக்கும்  என்
அழகு தமிழுக்கும்

என் தலை தாழ் வணக்கங்கள்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்.
பனி மலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்.
நனிபசு மொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்.
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்...

இப்போ இராஜி நான்
பேசப்போறேன் பாலாறா
பாவம் நான் விட்டுடுங்க
தப்பு இருந்தா...

தங்கம் விலையும்
தரணி என் தாய்வீடு
தமிழ் என் வீடு...

நந்தி மலையில் குதித்தாடி
ஓடி வந்து புகுந்தவள் நான்
வற்றாத நதியாக
வந்தவள் நான்...

மண்ணாசை பிடித்த
மானுடத்தால் மாறிப்போனேன்
எந்த பயத்துக்கு
ஓடுகிறேனோ தெரியவில்லை...

நான் வந்த வழி மறைந்து போக
நின்ற வழி  வறண்டு போக
பாவம் பாமரன்...

குதித்தோடும் என்மீது
குளித்தாடும் நிலா...
கவிஞர்களின் கற்பனையில் - நானோ
கவிதையாய் உலா...

பாராதியின் பாட்டிலே
நான் கொண்ட இடம் மூன்று
நான் பாய்ந்து செல்லும்
மாநிலமும் மூன்று...

கொண்டாபுரம் சிற்றூரில்
திசைமாறி போனேனே
காவேரிபாக்கம் பள்ளத்தாக்கில்
பெயர் மாறி போனேனே
பழைய பாலாறாய்...

கருணாகரத்தொண்டைமான்
கலிங்கம் கண்டது
என்னை முதலில் கடந்தே...

காஞ்சிக்கு வடக்கும்
எனதாய் இருந்ததன்று – நான்
வந்த வழி மறந்து தேடுகிறேன்...

என்னூருக்கு அருகே
எந்தன் புகுந்த வீடு
எத்தனை பேருக்கு தெரியும்
நடுவரே நீரே கூறு...

எந்நூறு ஆண்டுக்கு முன்
சென்னைக்கு வடக்கே சென்றேன்
இன்றோ பெயரளவில்
சென்னைக்கு தெற்கே செல்கிறேன்...

எனது பாட்டன்
முப்பாட்டன் காலத்திலும்
பாலாற்றின் கரையில்தான் சுடுகாடு
என் காலத்திலோ
சுடுகாட்டின் அருகிலே
செத்துக்கிடக்கிறது
பாலாறு...

வட்டமிட்டு வட்டமிட்டு
பிணம் தின்னும் கழுகுகளாய்
மணல் லாரிகள்

கன்னடக்காரன் காணாமல்
நான் வருவதால்
என்பேரு குப்தகாமினி

அதனாலோ என்னவோ
கன்னடன் தடுப்பதில்லை என்னை
குப்பத்தில் அணை கட்ட
தெலுங்கன் திட்டமிட்டுள்ளான்
160 அடிக்கு

கட்டிமட்டும் விட்டான்னா
பாலாறு நான்
பாலைவனம் தான்
தமிழ்நாட்டுல...

பாரதி பாடியது அரிஞ்சி தானோ ?!
மேவிசெழித்தன்னு
இறந்த காலமாய்
எதிர்காலத்தை எண்ணி...

மெட்ரோ வாட்டருக்கு
மெஸ்சேஜ் ஒன்னு சொல்லுறன்
நான் கேளுங்க...

வருஷா வருஷம்
வருஷம் வரும்...
உபரிநீர் உடைந்தோடும்

பொரம்போக்கு நெலத்துல
ஒரு ஏரிய வெட்டி
உபரிநீரைசேத்துவை
உபயோகமா இருக்கும்
என்னை நம்பி
பிரயோசனமில்லை

கன்னடக்காரண்
கண்ணை கட்டி வந்தாலும்
ஆந்திராக்காரன்
அணைக்கட்டப்போரானாம்

பயமா இருக்கு எனக்கு
தென்பன்னை போல
நானும் காணமா போய்டுவேனோன்னு

நதியெல்லாம்
தேசியமயமாக்க  புது
தேசம்தான் பொறக்கனும்

விஷத்தை குடிக்கிறான்
விவசாயி தமிழ்நாட்டுல
நடுவன் அரசோ
நாயத்தான் பாக்குது அவன

அந்நியன்
முதலீடு செஞ்சாலும்
விவசாயம் செஞ்சாத்தான்
வயிறு நிறையும்...

மணலை அள்ளுறான்
மணசாட்சி இல்லாமா
இதயம் கணக்குதடா
இனமே அழியுதடா

பத்து வருஷம் போனாக்க
பாலாறும் தேனாறும்
பாய்ஞ்சிசுன்னு சொல்லுவாங்க

வாழ்ந்து சென்ற
வரிசையில நாங்க...


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

குறிப்பு :
தங்கம் விலையும் தரணி ---- கோலார்(கர்நாடகம்)
வருஷம்---- (மழை)  குப்பம்--- ( ஆந்திராவின் எல்லைப்பகுதி)

Friday 2 November 2012

எங்கே...



உனக்கு நீயே
தெரியாது போனால்
தோற்றுப்போவாய்

உன்பெயர் மட்டும்
தெரிந்தால் போதுமா?
பூர்விகம் அறிய
வேண்டாமா?

ஒருவரால் கூடாது
இருவர் கூடி
ஆணுக்குள்
உயிரை வைத்து
பெண்ணுக்குள்
உருவம்

ஊதிய காற்றில்
எல்லாம்
அசைந்தது
உருவம் வெளியே
வந்து விழுந்தது

கதவுகள் தானாய்
மூடிக்கொண்டது
வந்து விழுந்ததும்
கதறி அழுதது... இனி
மீண்டும் போவது எப்படிஎன்று...

எல்லாம் பார்க்கிறான்
ஊதியவன்
ஓரமாய்
நின்று.
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.

மூடிவை...



வேலி
போட்டுக்கொண்டது
பழாப்பழம்...

ரோஜாவுக்கு கூட
முள்ளிருந்தால் தான்
அழகு...

பெண்ணே
உரித்துப்போட்டால்
பழங்கள் கூட
கெட்டுப்போகும்...

நீ – என்ன ?
திறந்து வைத்தால்
ஈக்கள் மொய்க்கும்
சாலை ஓரங்களில்
விற்கப்படும்
இனிப்பு பண்டமா?


இயற்கை உடுத்தியதை
உரியாதிருப்போம்
உன்னை
நீயே
இழிவுக்கு எடுத்துச்
செல்லாதே!

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

வன்முறை



பணிநீர் ஆடி
தென்றல் துடைத்து
சூரிய ஒளியில்
பூக்கள் திருவிழா...
சீட்டி அடித்து
வண்டுகள் வருகை
வட்டம் போட்டு
வாசம் நுகர்ந்து
திறந்த குப்பியில்
மகரந்த பருகை...

வந்து அமர்ந்தன
பட்டாம் பூச்சிகள்...
காதில்கேட்டன...
இரகசியம் என்ன ! பூவே
வண்டுகள்
சொன்னதன்
இரகசியம் என்ன ??
சொல்லி
அழுதன பாவம்
மலர்கள்...

உன்னை
உறிஞ்சி
தேன் எடுத்தேன்
பூவே...
காதலால்
அல்ல... 


வண்டு என் ஜாதி
முரடன்
என்பது – உனக்குத்
தெரியாது போனால்
பொறுப்பு நானால்ல...

காற்றடிக்கும் – மீண்டும்
நிமிர்ந்துகொள்!
என்று
இப்படிச்சொல்லி
அழுதன

பாவம் மலர்கள்
தடவிக் கொடுத்தன...
பட்டாம் பூச்சிகள்
பாவம் மலர்கள்...


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.

Thursday 1 November 2012

உணர்வாய்...




நான்...நீ...அவன்
வேறு வேறு அல்ல
இது
வேதாந்தம் அல்ல
விவேகம் உள்ளது- உண்மையை
அறியும்...

உயிர்கொடுத்தது
இருந்ததை எடுத்து
இறந்து போனது
முன்பே இருந்தது

உயிரோடு இருப்பது...
இருந்ததாய் இருந்தது
வட்டத்திற்கு ஏது
தொடக்கம்...!!

விரலால் தடவிப்பார்
ஆரம்பம் தெரிகிறதா என்று...!!!
பிராய்ச்சித்தம் செய்
வட்டத்தை விட்டு
வெளியே வா... எப்படியாவது!!

நான்...நீ...அவன்
வேறு வேறு அல்ல.

என்றும் அன்புடன்
                                                    கலைச்செல்வன்

நிம்மதி தேடி...




தாகமாய்
வாய் திரந்து
காத்துகிடக்கும்
சிப்பிகள் போல்...

வேதனையாய்
நான்கிடந்தேன்
கடற்கரை
மணரற்பரப்பில்...

நண்டுகள்
மெதுவாய் உரசி
ஓடின...
குழிதோண்டி
கண்ணாமூச்சி
விளையாடிக்காட்டின...

சப்தமாய் சிரித்து
அலைகள் கோபமூட்டின...
யார் அழுக்கையோ
துவைத்து தள்ளிய
சோப்புநுரைகளை
என்மேல்
வாரிதெளித்தன...

காற்று
மணலால் அடித்து
முகமெல்லாம்
பொத்துபோயின... 

கடலே...நீ...
சேமித்த கண்ணீர்
போதும்
என்கிறாயா?
நீயும் என்னை
துரத்தி தள்ளினால்
எங்கேபோவேன்?

யாரிடம் கேட்பேன்
யாராவது
முகவரிதெரிந்தால்
சொல்லுங்களேன்
தேடிப்போகிறேன்...

நிம்மதி தேடி...

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

Wednesday 31 October 2012

ஊருக்கு...



நீ
நடக்கிற
பாதைகளில்
கிடக்கிற கற்களெல்லாம்
தடைகள் என்றால்
ஊர்போய்
சேர்வாயோ?...

உன் வழி நெடுக
சிதறிய மணமெல்லாம்
நீ
நடந்து பொடித்துபோட்ட
கற்கள்தானே...

போகிறைட்த்தை
மனதில் நிறுத்து
பாதையில் துணைக்கு
படைத்தவனை
கூப்பிடு...

வந்ததின்நோக்கம்
சரியாய் செய்ய
போகிஇடம்
தானாய்புரியும்...

தரித்திரியம் எல்லாம்
தேடி தொடை
திருடனை
தேடிபிடித்து
தேரிழுக்க பழக்கு...

தர்மம்செய்ய
சத்திரம் கட்டு
தேசம் முழுதும்
அன்புகொடி நாட்டு...
தேவையுள்ளவனுக்கு
கூப்பிட்டு கொடு...

தேகம் இறுத்தி
சமாதிசெய்து
புத்தியைசெலுத்து
தானாய் நீயும்
ஊர்வந்து சேர்வாய்...

விருந்து வைத்து
காத்துகிடக்கிறான்
படைத்தவன்
உனக்காய்
வந்த்தின் நோக்கம்
சரியாய் செய்தால்...



என்றும் அன்புடன்
கலைச்செல்வன்