Tuesday 25 September 2012

அந்த நாள்... அவளோடு...

நீ தந்த முத்தம் 
நித்தம் தவிக்கும்
நினைவுக்குள் இன்றும்...

அந்த நாள்
அந்தி நேரம்
மழைபூமியோடும்
மாந்தோப்புக்குள் – நீ
என்னோடும்...

சல்லடையாய் சுடிதார்
சங்கடமாய் மனசு
கொடுத்துவைத்தது மழை

நள்ளிரவும் பேசும்
நடுவானில் நிலா
கடல்தாண்டி நான்
கனவுகள் மட்டும்
இன்றும் என்னோடு...

புரியாத கலவரம்
பூரிக்கும் இதயம்
பார்க்காத நாட்க்கள்
பேசாத நிமிடங்கள்...

நீ வைத்த மருதாணி
இன்னும் மணக்கும்
மனசுக்குள் மௌனமாய்...

நீயோ
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் ...
நானோ ...????!!!

கலைச்செல்வன்.

குற்றம்


உலகத்தை எழுதிவச்சேன்
உன்பெருமை எடுத்துவச்சேன்
உன் பேர ஊரெல்லாம்
பெருமையா பேசனும்னு
என் பேர மாத்திகிட்டேன்
உன் பேரவச்சி...

என் பேர மறந்துட்டீயே...!!

அம்மானு சொன்னாக்க
அழுதழுது கண்ணம்
சிவக்கும்
மகன்னு சொல்ல
மனசு இன்னும் வரலயே

ஒரு வேளை
கருவுல நீ கலச்சப்ப
ஏமாத்தி வந்த்தாலா
தினந்தினம்
தற்கொலையோ...

என் நெலம இப்படி...???

கலைச்செல்வன்
 —

Friday 14 September 2012

நான் எனக்குள்ளே...

நிரந்தரமா
ஒரு வேலை இல்லாம போனதால
நிம்மதியும் சேத்து 
தொலைச்சிபுட்டு தவிச்சேன்...

தொழிற்கல்வி படிக்காமா
தெருத்தெருவா அலைஞ்சேன்

நான்படிச்ச படிப்புக்கு
நல்ல வேலைகெடைக்காதானு
நாளுக்கு நா திரிஞ்சேன்...

ஒடம் பொறந்த அத்தனபேரும்
ஒதுக்கி வக்கையிலே
கடசிமொவன் – என்
நெலம பாத்து
நித்தம்நித்தம்
நீவடிப்பா
என்னபெத்த மவராசி...

நான்
எடுத்தெரிஞ்சு பேசயில
துடிச்சி போவா
தொந்தரவு செஞ்சாலும்
பொருத்துப்போவா

சொந்தகார ஆசாமி
துபாயிலேந்து வந்தாவ
வந்தவுக கையபுடிச்சி
கெஞ்சாத கொறையா

கேட்டதாலே
விசா எடுத்து
அனுப்புறேனு சொன்னாக
கொறஞ்ச பணம் முன்கூறு
கட்டச்சொல்லி போனாவ...

ஆடுவித்து
கோழிவித்து
அடிவயித்த காயப்போட்டு
அப்பனுக்குத்தெரியாம
பேங்குல போட்டப்பனம்
போதாம போனதால
அஞ்சு வட்டிக்கு வாங்கி
விசா எடுக்கச்சொல்லிபுட்டா...

விசாவந்து சேரனுமுன்னு
வேண்டாத சாமியில்ல
கும்புடாத கோயில்ல...

ஆத்தா
வேண்டுதலும் பலிச்சிடுச்சு
விசாவும் வந்திடுச்சி
விடிவுகாலம் பொறந்திடுச்சி

சீமைக்குப்போரான் –என்
சின்னராசா
செவனாண்டி வீரப்பேச்சு
செல்லப்பன் டீ கடயில..

கருத்தாயி பட்டகஷ்ட்டம்
கைமேல பலன்கெடைக்க
துபாயிக்கு
வந்து சேந்துபுட்டான்
கருத்தாயி பெத்தமொவன்

வெவரம் ஏதும் தெரியாம
விருமாண்டியா திரிஞ்சபுள்ள
பெத்தவுக பட்டகஷ்ட்டம்
தெரியாம வளந்தபுள்ள
துபாயிவந்து சேந்துபுட்டு
கண்கலங்கி நின்னானே
கருத்தாயி பெத்தமொவன்...

கண்ணுக்குள்ள
உசிராவச்ச – என்ன
பெத்த ஆத்தாகிட்ட – போனுல
பேசும்போது
ஒலகமே மறந்துடுவேன்
ஒசர பறந்துடுவேன்...

அசலும் வட்டியும்
அடைஞ்சதுமே
மூனு வருஷம் கழிஞ்சுபோச்சு...

பெத்தமக்கா மொகத்த பாக்க
போவனுமுனு நெனச்சப்போ
ஊடுகட்ட வேனுமுனு
செவனாண்டி போட்ட
லெட்டர படிச்சுபுட்டு
முடிவ நானும்
மாத்திப்புட்டு
ஊருக்கு போறத
ஒதுக்கி வச்சேன்

பட்டகஷ்ட்டம் படுவோன்னு
பார்டைமா கார் கழுவ
துணிஞ்சேன் – கண்ணுல
தூக்கம் காணாம போச்சு...

ஊரெல்லாம் மெச்சும்படி
மச்சிஊடு கட்டி முடிச்சேன்
ஓரமா ஒதுங்குனவுக
அத்தையும் மாமனும்
மொறகொண்டாடி வந்தாவ...

பழசயெல்லாம் மறந்துபுட்டு
பாக்குமாத்த நெனச்சாவ
பொறந்த பாசம் விடாம – என்ன
பெத்தவளும் ஒப்புகிட்டா

அங்கே
பத்திரிக்க அடிச்சு
பந்தகாலும் நாட்டாச்சு
இங்கே
பார்சலெல்லாம் கட்டிமுடிச்சு
ரெண்டுநாளு மிச்சமிருக்க

விதி வந்து தொட்டுபுட்டு...

கட்டட வேலயில
ஸ்கபோல்டிங் அவுக்கையில
கை தவற...
...................
கருத்தாயி பெத்தமொவன்
கைலாயம் போயிபுட்டான்...

ஆறுவருசம் கழிச்சி
ஆசமொவன் வருவானு
கணா கண்டா கருத்தாயி

செண்டெல்லாம் அடிச்சி
சின்னராசாவருவான்னு
செவனாண்டி காத்திருக்க

அம்புட்டு பேத்தையும்
ஆசமொவன் ஏமாத்தி
வந்தானே
ஆறடி பொட்டியில...

பெத்தமொவன் மொகத்த
பாக்கமுடியாம
மாரடிச்சி அழுதாளே...

மாடத்த கட்டிவச்சி
மயில புடிச்சிவச்சேன்
மாடமும் மயிலும் இருப்பதென்ன
என் மொவராசன் போனதென்ன

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

காதல்

காதல்
மொழியறியாது
காதல்
இனமறியாது
காதல்
தேசமறியாது

காதல்
கடல்கடக்கும்
காதல்
காற்றில் மிதக்கும்
காதல்
உலகமே உச்சரிக்கும்
ஒரே சொல்

காதல்
இதில்தான்
உலகமே ஒற்றுமை

ம்ம்ம்ம்

நீயும் கில்லாடிதான்

காதல்

பாசில்படர்ந்த
படிகட்டுகள்
காதலில்
வீழ்வது தெரியாது
வீழ்ந்ததும் புரியாது...

காதல்


காதலும் 
கல்லறையும் ஒன்று...

காதல் செய்யாதே


காதல்
செய்யாதே
காலம்
செயலிழக்கும்...

பூவின் மனம்
புன்னகை இழக்கும்
பூவையர் இனம் – சதி
வலைக்குள் இழுக்கும்

அது
தேகம் தேடும்
காதல் சுகம்..

பணம் செய்
பரத்தையும் வருவாள்
பிடிக்காத மலர் கூட
மணம் வீசும்- உன்
அந்தபுரத்தில்...

காதல்
புதுயுகத்தின்
ஹிட்லர்...புது
கில்லர்
சாட்சியே இல்லா
தீவிரவாதி

அன்புசெய்
அனைவரிடத்தும்
ஆறுதல் தரும்
ஆணந்தம் வரும்...



பொருள் செய்
புகழ் உன்னைத்தேடும்
புகழைநீ தேடாதே

காலங்கள் மாறும்
காத்திரு
கடமையை செய்

உன்
காலடியில் கிடக்கும்
நாளைய உலகம்
நம்பிக்கை பிறக்கும்
நல்வாழ்வு கிடைக்கும்

நன்றியுடன் நட
நாளை
நாடாளும் நாயகந்தான்
நீயும்...

அழகு...



அறியாத உன்னை
அடையாளங்கொண்டேன்
அன்று
அழகான நாள் அது

மெலிந்த தேகம்
கலைந்தகேசம்
கபடமில்லா மனசு
கடனில்லா சிரிப்பு

சற்றே
தள்ளாட்டம் என் மன்சில்
தாங்காத கொண்டாட்டம்

சித்திரமாய்
என் மனசுக்குள் நீ

சின்ன பொய்கள்
சிமிட்டாத விழிகள்
அப்பப்போ - போதும்
பெண்ணே – உன்னை
எழுதும்போதே
கூடிபோகிறது
காகிதத்தில் அழகு
பேனா முனைகளில்
கசிகிறது
காதல் திரவம்
காகிதகுப்பியில்...

விடியுமோ...


என்ன
குற்றம் செய்தோம்
இப்படியொரு பிழைப்பு
அகதிகளாய் பலர்
அயல்தேசத்தில் சிலர்...

இயற்கை வளம் கொழிக்கும்
இலங்கை எங்கள் திருநாட்டில்

வருடமாய் கனவு
வசந்தம் என்று
வருமோ?

வயது வந்த நாள்முதல்
விழிகளுக்குள் ஏக்கம்
வெடிகுண்டு சப்தம்
ஓய்வதென்றோ?

கலங்கரை
கம்பங்களே
கண்களுக்குள் காட்சிதர
அத்தனை மறந்தோம்...

தோட்டாக்களுக்கு பயந்து
தோனி ஏறிப்போனாலும்
காக்கிச்சட்டைகளுக்கு
காரணமில்லா கைதிகள்
நாங்கள்...
முகாமே சொந்தமாய்
தஞ்சம் புகுந்தாலும்
பார்வையில் விழுங்கும்
மன்மதன்களிடம்...

அய்யோ பாவம்...

அக்பராய் ஒருவன்
அன்னைதேசத்தில்
என்று பிறப்பானோ...??
  
கன்னிவெடிகள்
காணாதுபோக...

அழுகின்ற மழலைக்கு
தொட்டிலில் தாலாட்டு
தோட்டாக்களால்...

தவணிக்கணவுகள்
தரைமட்டமாய்
புத்தனின் தேசத்தில்...

பூமித்தாயே!
இனியேனும் தியாகசுடர் ஏற்று
இனிய வசந்தம் விடியட்டும்...

யுத்தம் செய்யும்
புத்திகெட்ட வர்க்கத்திற்கு
லட்சம் பல்லட்சம்
வெள்ளைபுறாக்கள்
அனுப்புகிறேன்
அப்படியேனும்
சமாதானம் மலரட்டும்...

பத்தாண்டுகள் கழிந்து
தோண்டும் இடமெல்லாம்
செந்நீர் ஊற்றுகள்
செம்மணல் மேடுகளாய்
மரித்த மலர்களின்
மௌனவாசம்
மண்ணுக்குள் வீசும்...

எந்த மண்ணில் வாழ்ந்தாலும்
அன்னை மண்ணில் புரள
அன்புமடி வேண்டுகிறேன்...

புத்தனும் காந்தியும்
மறுபிறப்பு எடுக்கட்டும்
மர்மதேசம் மாரட்டும்
மனித்தேசமாய் மலரட்டும்.

இரகசியமாய்...

படம் பிடித்தேன்
டெவலப் பிரிண்டிங் எல்லாம்
போட்டு கொண்டேன்
பயப்படாதே
யாருக்கும் தெரியமாட்டாய்
எனக்குள் மட்டும் தான் நீ
கேமரா இல்லாமலேயே...

நாக்கு

வெளியே திரிகிற
பாம்புகள் காட்டிலும்
எனக்கு அதிகம்
உள்ளிருந்து பேசுகிறேன்...

நிரந்திரமில்லா நிஜம்

தீண்டும் சுகம்
அடங்கும் அது நிமிடம்
வந்துவிட்டு போகும்
வழிபோக்கன் போல
மாயை...

மீண்டும் மீண்டும் – தேடும் இதில்
மனம்
இது இல்லாது போனால்
பிரம்மா பூஜ்யம்... ஆம்
நிரந்தரமில்லா நிஜம்!

சிக்கனம்


ஒரு
சினிமா நடிகை
ஆடிகொண்டிருந்தாள்
அரைகுறை
ஆடையில்...

என் கண்மணி

மூடித்திறக்கும் போதெல்லாம்
பெண்ணே...
உனக்கு வலிக்கிறதா?
இனி – நான்
தூங்காதிருக்க முடிவு...

விபச்சாரி...

வெட்டவெளி
பொட்டலில்
திறந்துகிடக்கிற
மலத்தில்
விழுந்து கிடக்கிற
மலர்...

நாகரீகம்



கடவுள் 
என்ற ஓவியன்
வரைந்த 
அழகிய ஓவியத்தை
மெறுகூட்ட முயற்சிசெய்து
மனுஷன் தொட்டு
முகம் மாறிப்போய்
நின்றது இவ்வுலகு.

Tuesday 11 September 2012

அம்மா...

மேடிட்ட வயிற்றை
மெல்லத்தடவி
மனதுக்குள் தாலாட்டு
மௌனமாய்...
உள்ளிருந்து
உதைக்கும் என்னை
உறங்கவைக்க....

பட்டாம் பூச்சி...


எது தோல்வி


   எது தோல்வி

காதல்
ஒருக்கிலும்
தோற்பதில்லை...
வெற்றிபெறாததை
காதல் என்று சொல்லாதே
அது கவர்ச்சி

காதலிக்கும் போது
காகங்கள் கரைச்சல்கூட
காணமாயிருக்கும்

கருத்த மேகங்களில்
உன் காதலியின்
கூந்தல் ஞாபகம் வரும்

நெஞ்சம் முழுதும்
அவள்முகம்
நிரம்பிகிடக்கும்

அவள்
சொந்தங்கள் எல்லாம்
உனக்கு பிரியமாயிருக்கும்

தூக்கம் குறையும்
காதுகள் கேட்கிற
சக்தி இழக்கும்...

தாய்தகப்பனின்
இடைவெளிகூடும்
உன் உறவுகள்
உனக்கு அந்நியமாகும் 

உன் உயிர்
அவளிடம் கிடக்கும்

அசடே
எல்லாம் காதலின் வேகம்

மறைவாய் செய்தாய்
உனக்கே தெரியும்
தவறுகள் என்று...

துணிந்ததும் பின்
காதலை ஏற்பதில்
தயக்கம் என்ன?

காரணம் ஆயிரம் காட்டி
தலைஏன் சாய்த்தாய்

காதல் என்றால்
அதன் பெயர்
வெற்றி...

காதல் என்றால்
அதன் பெயர்
சந்தோஷம்

நீ
காதலி...காதல்
ஒருக்கிலும்
தோற்பதில்லை.

Wednesday 5 September 2012

தற்கொலை...


தியாகி...


திருவிழா...




ஜனவரி 7- 2007 ஆம் ஆண்டு அபுதாபிதமிழ்சங்கம் ஒரு கவிதை அரங்கம் நிகழ்ச்சி நடத்தியது அதில் நான் பங்குபெறுவதில் பலர் கருத்துவேறுபாடு காட்டினார்கள் ஆனால் எதையும் பொருட்படுத்தாது வாய்ப்பினை தந்த அருமை தோழர் அண்ணன் திரு.குத்புதீன் ஐபக் அவர்களுக்கும், அபுதாபிதமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும், அருமை சகோதரர் தமிழ் பண்பாளர் சங்கமம் தொலைகாட்சி நிறுவனர் திருவாளர்.கலையண்பன் அவர்களுக்கும் எனக்கு வாய்ப்புகளை அமைத்து தந்தமைக்கும் மணமார்ந்த நன்றிகள் ஆயிரம்.

இந்த பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் என்னை நான் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.





திருவிழா...


நிர்வானமாய் பிறந்தோம்
நிதானத்தை இழந்தோம்
இறைவனை
நினைக்க மறந்தோம்
நிம்மதி இழந்தோம்...

வீராப்பு பேசி வந்தோம்
வெறுமனே போகிறோம்
இது தான் – நம்
படைப்பில் நாம்
படைக்கும் பரோபகாரமா?

அடித்துபிடித்து
கிடைத்த்தை சுருட்டி
இருக்கின்ற உறவுக்கு
சந்தோஷம் கொடுக்கிறோம்
சந்தோஷம் வந்தவழி
சோகமென்பதை மறந்தோம்...

சோதனைகள் வந்தால் மட்டும்
சேவிக்கிறோம்
அல்லாஹுவே
ஆண்டவரே
அரியே சிவனே...

மானுடத்தின் லீலைகளை
கண்டதும் நகைக்கிறான்
கடவுளும்...

படைத்ததின் நோக்கம் மறந்தோம்
படைத்தவன் கொடுத்த பகுத்தறிவை
அடுகு கடைதனில்
அடமானம் வைத்தோம்...

மிருகமாய் மாறினோம்
மாற்றமில்லாது வாழ்கிறோம்...

உண்பதும் உறங்குவதும்
ஊடல் கொள்வதும்
உயிர்களை வதைத்தும்
உல்லாசமடைகிறோம்
ஆறாம் அறிவிருந்தும்
என்னபயன்...?

பகுத்தறிவு மிருகமாய்
பகலும் இரவும்
சுற்றி திரிகிறோம்
மனிதனை மனிதனே
வேட்டையாடுகிறோம்...

நரம்பில்லா நாவால் – துரு
நாற்றமடிக்க பேசுகிறோம்
நாற்பதை தொட்டதும்
நாய்குணம் ஏற்கிறோம்
நன்றியை மட்டும் மறக்கிறோம்...

அடுத்தவன் முதுகில்
சவாரி செய்து
பெயரும் புகழும்
சம்பாதிக்கிறோம்...

மரணம் வேண்டாது
மன்றாடுகிறோம்...

இறைவன்...
படைப்பில் சிறந்தது
மானுடம் என்றான்

பூகோலக்காதையில்
பூரிக்கும் விடயமாய்
விளங்குவான் மனிதன்...

ஆண்டுகள் பல
நகர்ந்தால்
வாழ்ந்து சென்ற
வரிசையில் நிற்கும்
மானுடம்...

சைத்தானின்
சக்தியால்
உருவான வர்க்கமே


சாதித்தது என்ன...?

சாதியின் பெயரில்
சண்டைகள்
இனத்தால்
கலவரம்
மொழியால்மூடநம்பிக்கை...

படைத்தவனே
பதறுகிறான்
செய்த தவற்றை என்னி
வருந்துகிறான்...

ஏ...!!!
அற்புத மானுடமே
வந்தோம்
வாழ்ந்தோம்
மறைதோமென
வேண்டாமே
ஒரு வாழ்க்கை

வாழ்வித்தோம் என்று
வாயாறக்கூறி
விடைபெருவோம்
நிம்மதி பெருமூச்சு
நிலையாய் விடுவோம்...

பகுத்தறிவை கொண்டு
பாரெல்லாம் புகழ
வாழ்வோம்...

இறைவன் இட்ட கட்டளை
ஏற்று நடப்போம்...
எல்லாம் நமதாய்
எந்நாளும் நினைப்போம்...

அன்று கொண்டாடுவோம் 
ஆணந்த திருவிழா...

ஜெய்ஹிந்த்...!!!


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்