Monday 28 May 2012

ஒரு கண்ணீர் விடியல்
(சுனாமி ஓர் நினைவுகள்)


கடற்கரை ஓரமெல்லாம் ஒப்பாரி
கட்டுமரங்களை தொட்டிலாய் கட்டி
தாலாட்டிபார்த்துவிட்டு தாழத்தள்ளி
தலை நசுக்கினாய்....

ஈரமணலில் குழிதோண்டி
நீர் நிரைத்து விளையாடி
உன் மடியில் தலை சாய்த்த- என்
வாரிசுகளை விழிங்கிகொண்டாய்...

சோறூட்டி உடல் வளர்த்து
பலம் கூட்டி தாயே
ஏன் என்னை மல்லாக்கப்போட்டு
சாகடித்தாய்...

பெருமூச்சுவிட்டு கிடக்கிறகடலே
உன்னைத்தான் கேட்க்கிறேன் –நீ
சரித்திரம் செய்ய எத்தனை
சமாதிகள் செய்தாய்...

ஐயோ...!!!
அன்று
உலகமே கதறி அழ
இப்படியாய் விடிந்தது


No comments:

Post a Comment