Wednesday 19 October 2011

என் அம்மா


என்னை கட்டியணைத்து
மார்போடு போட்டு
முகம் புதைக்க
பாலூட்டி
விரல்களால்-சிரம்
தடவிய அம்மா...

நா – தடுக்கி தடுமாறி
பேசியதெல்லாம்
சொல்லுடா சொல்லுடா
என்று மண்டிபோட்டு
என் குரலுக்காய்
தவம் கிடந்த... அம்மா...

தடுமாறி விழுந்து விழுந்து
 நடக்க நான்  பழக
தோள் கொடுத்து
கைகொடுத்து
முட்டிதேய அவளும் நடந்து
பாவம் என் அம்மா...

அழுகின்ற போதெல்லாம்
ஓடியோடி சாகிறவள்
என் அம்மா...

வளர்ந்து
அனுஅனுவாய் என்னை
ரசித்துப்பார்த்தவள்
பசித்தலுக்கு மட்டுமல்ல
அம்மா...
கனத்துப்போகிறது
எழுதத்தெரியவில்லை...

என்  நெஞ்சமெல்லாம் அம்மா
 நெஞ்சுக்குள்
சுமந்து பாரமாய்
நான் உணர்ந்தேன்
என் தாய்க்கு
என்ன நான் செய்தேன்?


நான் தங்கிய நாட்களெல்லாம்
சுமந்து தீர்த்த வலியெல்லாம்
எடுத்துபோட்ட வாந்திக்கெல்லாம்

என் அம்மா
குனிந்து நிமிர்ந்து
பட்ட வேதனைக்கெல்லாம்
கடவுளே !
ஏன் ஒரு ஜனனத்தை படைக்க
ஒரு ஜீவனை ஏன்
வேதனிப்பிக்கிறாய்?

இப்படியானால்
நீ என்ன செய்கிறாய்??
படைப்பு முழுதும் பொறுப்பாய்
செய்தவள் என்
தாயல்லவா?!

வணங்குவதை காட்டிலும்
கைமாறு உண்டோ ?
சரிதானே
நீயும் சம்மதிப்பாய்
என்முடிவும் சரியானதென்று.

என்
நெஞ்சுக்குள் சுமந்து
பாரமாய் நான்
உணர் ந்தேன்...

என்ன கைமாறு
நான் செய்தேனென்று...



No comments:

Post a Comment