Wednesday 19 October 2011

என் தேவதை...


என் தேவதை...

உன் புன்னகையின் முன்
பொன்னகை வெட்கி
தலைகுனியும்...

தலை நிமிர்த்தும்
பூக்கள் எல்லாம்
அன்னாந்து பார்த்து
அதிசயிக்கும்...

தாமிரபரணியின் மீன்கள்
தாரகை உன் வருகை கேட்டு
துள்ளி குதிக்கும்...

குளக்கரை படிக்கட்டுகள்
உன் குதிகால் பார்க்க
ஏங்கி தவிக்கும்...

பூசுமஞ்சள்
புதுவாழ்வு பெறும்
உன் கை பட்டு
பியர்ஸ் சோப்பும்
சொல்லுமே…

"தும்சுமே பியார் கே..."

நீருக்குள் கலவரம்
நிதானமாய் நடக்கும்
தவளைகள் எல்லாம்
தம்பட்டம் அடிக்கும்...

தண்ணீருக்குள் தாமரை
தள்ளாடி நிற்க்கும்
தங்கபதுமை உன்
தங்கமேனி கண்டு...

கள்ளத்தனமாய்
காணாங்கோழி
கண்டுரசிக்கும்...


உன் கூந்தல்துவட்ட
 உதிரும் நீர்துளி
கண்ணீர் வடிக்கும்...

கண்ணாடி முன்பு நீ
நிற்பது கண்டு
கண்கள் கூசும் கண்ணாடியும்
கண்ணடித்துப் பார்க்கும்...

பவள மல்லி பால் நிலவே
பட்டணத்து
ஜவுளிக்கடைபொம்மையெல்லாம்
ஜொள்ளுவிட்டு பொறாமை கொள்ளும்...

அதிகாலை சூரியனும்
அன்பே நின் அழகை கண்டு
அதிசயிக்கும்...

என்
நினைவெல்லாம் நீ இருக்க
நிச்சயம் வருவேன்
நானுனக்கு மணாளனாய்...

மாப்பிள்ளை நான்
அதிஷ்ட்டக்காரன்...

No comments:

Post a Comment