Monday 31 October 2011

வந்து போச்சு வயசு....


ஆடி ஓடி ஒழச்சப்போ
அஞ்சாறு பவுனு சேத்து
அனுப்பி வைக்க
அலஞ்சி திரிஞ்சி
அலுத்தும் போச்சு
பாழாப்போன வரதட்சனை...


அப்பனுக்கும்
ஆத்தாலுக்கும்
ஆடிபோச்சு பல்லு கூட


எனக்கும்
அம்பது வயசாச்சு
அக்கம் ஒரேபோச்சு
தரித்திரியம் புடிச்சவனு....


இருபது வயசில
இருந்திச்சொரு மோகம்
காதலென்னும் பருவம்
சமாதி அயிபுட்டு
சண்டாள கிராமத்தில
நான்
சாதி கெட்டு போனதால...


முப்பது வயசுல
மொத தாரம் ஆவேன்னு
முனியங்கோயில் சாமி வந்து
குறிசொல்லி போனுச்சு
கல்யாண ஆசயது
கனவெல்லா பறந்துச்சு....


வயசான் பின்னாலும்
வண்ணம் பூசி பாத்தாக
வந்தவுக போனவுக


மினுக்கட்டான் பூச்சிபோல
ஊட்டுக்குள்ள கெடந்துப்புட்டேன்


அம்பது வயசிலாச்சிம்
தாயில்லா புள்ளைக்காக
ரெண்டாந்தாரம் வேனுமுனு
எவனாவது வருவான்னு
ஏங்கி கெடந்து தவிச்சுபுட்டேன்...


மாச வெட கொடுத்த பின்னும்
மாப்புள்ள வருவான்னு
பருவப்பூ பூப்பதுண்டு.....


ரெண்டாங்கெட்டான்
ஆயிபுட்டு என் பொழப்பு
இன்னும் நான்
கன்னியாவே....
அறகெழம் ஆனபின்னும்....


நான் ஆயிசுக்கும்
இப்படித்தான்
இருக்கோனுமா?!






No comments:

Post a Comment