Monday 10 December 2012

இல்லை...இல்லை...


ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்...
ஏழை சிரித்தால்
இறைவனை கண்டதாய்
சாட்சி உண்டோ...
காலணா காசுக்கு வழியில்லை
காலில் அனிய செருப்பில்லை
குத்தினால் கல்லும் முள்ளும்
அதுக்கும் பொறுப்பில்லை...
சாப்பிட வயிற்றுக்கு
உணவில்லை...
படுக்க கட்டிலில்
கயிறில்லை...
காலையில் எழுந்ததும்
கடன் தொல்லை...
எங்களிடம் உள்ளதெல்லாம்
இல்லை...இல்லை...
இல்லை...
வீட்டில் குடிக்க
கஞ்சியுமில்லை
குளிக்கப் போனால்
குழாயில் தண்ணீருமில்லை...
கிணற்றுக்குப் போனால்
வாளியே இல்லை...
குளித்துட்டுப் போனாலும்
குளிக்காமல் போனாலும்
வேலை காலி இல்லை...
படிக்கிற வயசுல
இருக்கிற பிள்ளையை
பள்ளிக்கு அனுப்ப
துட்டுமில்லை...
வலுத்தவனிடத்தில்
உதவிக்குக் கைநீட்ட
நாய்போல் ஆட்ட
வாலில்லை...
அப்படி இப்படி
வண்டிய இழுத்து
மாடாய் வாழ்வை கழிச்சாச்சு...
கனவுகள் கண்டு
நாளாச்சு...
கட்டையும் போகிற
வயசாச்சு...
ஏழையின் வாழ்வில்
சுத்துது சக்கரம்
அப்படியே...
என்
பிள்ளையும் வருவான்
இப்படியே...


என்றும் அன்புடன் 
கலைச்செல்வன்




No comments:

Post a Comment