Tuesday 4 December 2012

பாலாறு


அபுதாபி தமிழ்ச்சங்கம் 07.12.2012 அன்று நடத்த இருக்கும் கவியரங்கத்தில் திரு.நெல்லை கண்ணன் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திருமதி.இராஜி இராஜேந்திரன் அவர்களுக்காக எழுதி கொடுத்தது.


ஆன்றோர்கும் – மிகப்பெரும்
சான்றோர்கும்
அவையோருக்கும்  என்
அழகு தமிழுக்கும்

என் தலை தாழ் வணக்கங்கள்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்.
பனி மலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்.
நனிபசு மொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்.
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்...

இப்போ இராஜி நான்
பேசப்போறேன் பாலாறா
பாவம் நான் விட்டுடுங்க
தப்பு இருந்தா...

தங்கம் விலையும்
தரணி என் தாய்வீடு
தமிழ் என் வீடு...

நந்தி மலையில் குதித்தாடி
ஓடி வந்து புகுந்தவள் நான்
வற்றாத நதியாக
வந்தவள் நான்...

மண்ணாசை பிடித்த
மானுடத்தால் மாறிப்போனேன்
எந்த பயத்துக்கு
ஓடுகிறேனோ தெரியவில்லை...

நான் வந்த வழி மறைந்து போக
நின்ற வழி  வறண்டு போக
பாவம் பாமரன்...

குதித்தோடும் என்மீது
குளித்தாடும் நிலா...
கவிஞர்களின் கற்பனையில் - நானோ
கவிதையாய் உலா...

பாராதியின் பாட்டிலே
நான் கொண்ட இடம் மூன்று
நான் பாய்ந்து செல்லும்
மாநிலமும் மூன்று...

கொண்டாபுரம் சிற்றூரில்
திசைமாறி போனேனே
காவேரிபாக்கம் பள்ளத்தாக்கில்
பெயர் மாறி போனேனே
பழைய பாலாறாய்...

கருணாகரத்தொண்டைமான்
கலிங்கம் கண்டது
என்னை முதலில் கடந்தே...

காஞ்சிக்கு வடக்கும்
எனதாய் இருந்ததன்று – நான்
வந்த வழி மறந்து தேடுகிறேன்...

என்னூருக்கு அருகே
எந்தன் புகுந்த வீடு
எத்தனை பேருக்கு தெரியும்
நடுவரே நீரே கூறு...

எந்நூறு ஆண்டுக்கு முன்
சென்னைக்கு வடக்கே சென்றேன்
இன்றோ பெயரளவில்
சென்னைக்கு தெற்கே செல்கிறேன்...

எனது பாட்டன்
முப்பாட்டன் காலத்திலும்
பாலாற்றின் கரையில்தான் சுடுகாடு
என் காலத்திலோ
சுடுகாட்டின் அருகிலே
செத்துக்கிடக்கிறது
பாலாறு...

வட்டமிட்டு வட்டமிட்டு
பிணம் தின்னும் கழுகுகளாய்
மணல் லாரிகள்

கன்னடக்காரன் காணாமல்
நான் வருவதால்
என்பேரு குப்தகாமினி

அதனாலோ என்னவோ
கன்னடன் தடுப்பதில்லை என்னை
குப்பத்தில் அணை கட்ட
தெலுங்கன் திட்டமிட்டுள்ளான்
160 அடிக்கு

கட்டிமட்டும் விட்டான்னா
பாலாறு நான்
பாலைவனம் தான்
தமிழ்நாட்டுல...

பாரதி பாடியது அரிஞ்சி தானோ ?!
மேவிசெழித்தன்னு
இறந்த காலமாய்
எதிர்காலத்தை எண்ணி...

மெட்ரோ வாட்டருக்கு
மெஸ்சேஜ் ஒன்னு சொல்லுறன்
நான் கேளுங்க...

வருஷா வருஷம்
வருஷம் வரும்...
உபரிநீர் உடைந்தோடும்

பொரம்போக்கு நெலத்துல
ஒரு ஏரிய வெட்டி
உபரிநீரைசேத்துவை
உபயோகமா இருக்கும்
என்னை நம்பி
பிரயோசனமில்லை

கன்னடக்காரண்
கண்ணை கட்டி வந்தாலும்
ஆந்திராக்காரன்
அணைக்கட்டப்போரானாம்

பயமா இருக்கு எனக்கு
தென்பன்னை போல
நானும் காணமா போய்டுவேனோன்னு

நதியெல்லாம்
தேசியமயமாக்க  புது
தேசம்தான் பொறக்கனும்

விஷத்தை குடிக்கிறான்
விவசாயி தமிழ்நாட்டுல
நடுவன் அரசோ
நாயத்தான் பாக்குது அவன

அந்நியன்
முதலீடு செஞ்சாலும்
விவசாயம் செஞ்சாத்தான்
வயிறு நிறையும்...

மணலை அள்ளுறான்
மணசாட்சி இல்லாமா
இதயம் கணக்குதடா
இனமே அழியுதடா

பத்து வருஷம் போனாக்க
பாலாறும் தேனாறும்
பாய்ஞ்சிசுன்னு சொல்லுவாங்க

வாழ்ந்து சென்ற
வரிசையில நாங்க...


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

குறிப்பு :
தங்கம் விலையும் தரணி ---- கோலார்(கர்நாடகம்)
வருஷம்---- (மழை)  குப்பம்--- ( ஆந்திராவின் எல்லைப்பகுதி)

No comments:

Post a Comment