Tuesday 11 December 2012

நிலாப்பெண்ணே...

கள்ளச்சிரி
சிரித்தாள்...

உமிழ்ந்து
துப்பிய ஒளிக்கீற்றுகளை
மேலே பூசிக்கொள்
பூமி,
அண்ணாந்து பார்த்தது
அகல வாய்திறந்து...


ஓவியன்
காத்துக்கிடந்தான்
கவிஞன்
காலகாலமாய்...
நல்லவனும் ஏமாந்தான்
கஷ்டகாலம்...

மணமகன் கோலத்தில்
கோட்டானும் ஆந்தைகளும்
வௌவாலும்...
விஷங்களெல்லாம்
வீரியமாய்...

காதலிக்க
இரவில்
ஊர்வலமா வருகிறாய்...??

ஊர் உறங்கிய பின்
உத்தமி
வெளியே வருவாளா?

விரிந்த அகல
மேகங்களே
சாலைகளை
மூடிக்கொள்ளுங்கள்
உலா வருகிறாள்
வெள்ளைப் புடவைக்காரி
வியாபாரம் பேச...

நல்லவர்கள்
உறங்கட்டும்
நீ போ...

அமாவாசை
எங்களுக்கு
பழகிப்போனதுதானே!

யாரிடமாவது
அங்கிகளை
கடன்கேட்டு - உன்
முகத்திற்கு
முக்காடிடு...

இருட்டில் நீ வந்து
எங்கள்
உள்ளங்களை
கருப்பாக்கிப் போகாதே...!!!

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்



No comments:

Post a Comment