Tuesday 22 November 2011

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

நிலவே என்னிடம் நெருங்காதே..
காலம் ஒரு விசித்திரச் சக்கரம்! மனம் நாடும்போது விலகிப்போகும்!
அது சேரும்போது மனம் விலகிப்போகும்! இந்தப் புதிருக்கு விடையெங்கே?
எடுக்காமல் விடுத்திருந்தால் .. நலம் என நினைக்கத் தோன்றுகிறது!

நிகழ்காலத்தைக் கையில் வைத்துக்கொண்டு
எதிர்காலக் கவலையில் வாழ்கிறோமே..
கடந்தகாலத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு
நிகழ்காலத்தில் வாழ்ந்திடக் கற்கிறோமா?
புரியாத இந்த புதிரைத்தான் வாழ்க்கை என்கிறோம்!
அறியாத விஷயங்களை அறிந்துகொண்டதாக நடிப்பது இங்கே அதிகம்!
தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொண்டதாக நினைப்பும் இருக்கும்!
நம்மையும் மீறி நடப்புகள் அமையும்போதுதான் - இது காலத்தின் கோலம் என்பது புரியும்!

எனக்கு கவியரசு கண்ணதாசனிடம் பிடித்த மாபெரும் விஷயம்..
ஒரு காதல்.. பிரிவு..சோகப் பாடலிலும்கூட தத்துவ முத்திரை பதித்திடும் வினோதம்தான்!

நிலவே என்னிடம் நெருங்காதே.. என்று பல்லவி கொண்டு துவங்கும் ராமு திரைப்படப்பாடல் விஸ்வநாதன் என்னும் இசை அரசனால் வார்த்தெடுக்கப்பட்ட அற்புதப் பாடல்!
கதாநாயகன் - காலத்தின் கோலமாய்க் காட்சியளிக்கிறான்!
கண்ணதாசன் வார்த்தைக் கோலங்களில் - அவன் வாழ்க்கையைக் காட்டுகிறான் முத்தாய்ப்பாய்!
அமைதி இல்லாத நேரத்திலே - அந்த
ஆண்டவன் எனையேப் படைத்துவிட்டான்!
நிம்மதி இழந்தே நான் தவித்தேன்
இந்த நிலையிலும் நீ ஏன் தூதுவிட்டாய்????????
அட.. காதலின் சோகம்.. தாக்கிய தருணத்திலே.. சிந்தனையைப் பாருங்கள்.. அமைதியில்லாத நேரத்திலே ஆண்டவன் இவனைப் படைத்தானாம்! அதனால்தான் அவஸ்தைப்படுகிறானாம்! கவிஞனே..இன்னும் இன்னும் உன்னை நான் நேசிக்கிறேன்!!

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்…. இல்லை…

No comments:

Post a Comment