Tuesday 4 September 2012


தோ
தோழர்களே பழய ஆக்கம் புதிய பொலிவு
சில வருஷங்களுக்கு முன் எழுதியது....



அந்த நாள் ஞாபகம்....
வண்ணச்சிறகுகளாய்
வலம் வர நினைத்தேன்
சிறகுகள் ஏனோ உடைந்தன
வேஷக்கார வேடர்களால்

அன்று
ஏனோ சூழ்நிலை
எனக்கு  மட்டும் அப்படி...
அதனால் அன்றோ
சுகமான சுமைகளுடன் நான்
இன்று...

சுள்ளென்று சூடேறும்
இளமை இரத்தம்
விழிகளின் விளிம்புகளில்
கண்ணீரே மிச்சம்...

எனக்குள்ளே ஆசை
கவிஞனாக வேண்டுமென
கவிஞனானேன் என்
சோகதை எழுதி எழுதி...

பதினான்கு வயதன்று
பயமற்றுப்போனது
பட்டம் பயில வேண்டுமென
பாவிமணம் என்னியது 


பதினைந்து வரவிலது
பட்டுப்போனது
பணமென்னும் பட்டணத்து வீதியிலே
பாழும் விதியோ
இங்கும் வெண்றது.

உலாவந்த வீதியெல்லாம்
உற்சவம் நடந்தது
உற்றாரின் தூற்றலும்
ஊராரின் போற்றலும்

தனிமை என்னை தத்தெடுத்து
துணிவுகளை கற்று தந்து
துச்சங்களை துரத்தியது

வேகம் பிறந்தது
விவேகம் வந்தது
விடியல்தான் இனி
எனக்குள்...

                                                                    

No comments:

Post a Comment