Friday 14 September 2012

விடியுமோ...


என்ன
குற்றம் செய்தோம்
இப்படியொரு பிழைப்பு
அகதிகளாய் பலர்
அயல்தேசத்தில் சிலர்...

இயற்கை வளம் கொழிக்கும்
இலங்கை எங்கள் திருநாட்டில்

வருடமாய் கனவு
வசந்தம் என்று
வருமோ?

வயது வந்த நாள்முதல்
விழிகளுக்குள் ஏக்கம்
வெடிகுண்டு சப்தம்
ஓய்வதென்றோ?

கலங்கரை
கம்பங்களே
கண்களுக்குள் காட்சிதர
அத்தனை மறந்தோம்...

தோட்டாக்களுக்கு பயந்து
தோனி ஏறிப்போனாலும்
காக்கிச்சட்டைகளுக்கு
காரணமில்லா கைதிகள்
நாங்கள்...
முகாமே சொந்தமாய்
தஞ்சம் புகுந்தாலும்
பார்வையில் விழுங்கும்
மன்மதன்களிடம்...

அய்யோ பாவம்...

அக்பராய் ஒருவன்
அன்னைதேசத்தில்
என்று பிறப்பானோ...??
  
கன்னிவெடிகள்
காணாதுபோக...

அழுகின்ற மழலைக்கு
தொட்டிலில் தாலாட்டு
தோட்டாக்களால்...

தவணிக்கணவுகள்
தரைமட்டமாய்
புத்தனின் தேசத்தில்...

பூமித்தாயே!
இனியேனும் தியாகசுடர் ஏற்று
இனிய வசந்தம் விடியட்டும்...

யுத்தம் செய்யும்
புத்திகெட்ட வர்க்கத்திற்கு
லட்சம் பல்லட்சம்
வெள்ளைபுறாக்கள்
அனுப்புகிறேன்
அப்படியேனும்
சமாதானம் மலரட்டும்...

பத்தாண்டுகள் கழிந்து
தோண்டும் இடமெல்லாம்
செந்நீர் ஊற்றுகள்
செம்மணல் மேடுகளாய்
மரித்த மலர்களின்
மௌனவாசம்
மண்ணுக்குள் வீசும்...

எந்த மண்ணில் வாழ்ந்தாலும்
அன்னை மண்ணில் புரள
அன்புமடி வேண்டுகிறேன்...

புத்தனும் காந்தியும்
மறுபிறப்பு எடுக்கட்டும்
மர்மதேசம் மாரட்டும்
மனித்தேசமாய் மலரட்டும்.

No comments:

Post a Comment