Wednesday 5 September 2012

திருவிழா...




ஜனவரி 7- 2007 ஆம் ஆண்டு அபுதாபிதமிழ்சங்கம் ஒரு கவிதை அரங்கம் நிகழ்ச்சி நடத்தியது அதில் நான் பங்குபெறுவதில் பலர் கருத்துவேறுபாடு காட்டினார்கள் ஆனால் எதையும் பொருட்படுத்தாது வாய்ப்பினை தந்த அருமை தோழர் அண்ணன் திரு.குத்புதீன் ஐபக் அவர்களுக்கும், அபுதாபிதமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும், அருமை சகோதரர் தமிழ் பண்பாளர் சங்கமம் தொலைகாட்சி நிறுவனர் திருவாளர்.கலையண்பன் அவர்களுக்கும் எனக்கு வாய்ப்புகளை அமைத்து தந்தமைக்கும் மணமார்ந்த நன்றிகள் ஆயிரம்.

இந்த பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் என்னை நான் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.





திருவிழா...


நிர்வானமாய் பிறந்தோம்
நிதானத்தை இழந்தோம்
இறைவனை
நினைக்க மறந்தோம்
நிம்மதி இழந்தோம்...

வீராப்பு பேசி வந்தோம்
வெறுமனே போகிறோம்
இது தான் – நம்
படைப்பில் நாம்
படைக்கும் பரோபகாரமா?

அடித்துபிடித்து
கிடைத்த்தை சுருட்டி
இருக்கின்ற உறவுக்கு
சந்தோஷம் கொடுக்கிறோம்
சந்தோஷம் வந்தவழி
சோகமென்பதை மறந்தோம்...

சோதனைகள் வந்தால் மட்டும்
சேவிக்கிறோம்
அல்லாஹுவே
ஆண்டவரே
அரியே சிவனே...

மானுடத்தின் லீலைகளை
கண்டதும் நகைக்கிறான்
கடவுளும்...

படைத்ததின் நோக்கம் மறந்தோம்
படைத்தவன் கொடுத்த பகுத்தறிவை
அடுகு கடைதனில்
அடமானம் வைத்தோம்...

மிருகமாய் மாறினோம்
மாற்றமில்லாது வாழ்கிறோம்...

உண்பதும் உறங்குவதும்
ஊடல் கொள்வதும்
உயிர்களை வதைத்தும்
உல்லாசமடைகிறோம்
ஆறாம் அறிவிருந்தும்
என்னபயன்...?

பகுத்தறிவு மிருகமாய்
பகலும் இரவும்
சுற்றி திரிகிறோம்
மனிதனை மனிதனே
வேட்டையாடுகிறோம்...

நரம்பில்லா நாவால் – துரு
நாற்றமடிக்க பேசுகிறோம்
நாற்பதை தொட்டதும்
நாய்குணம் ஏற்கிறோம்
நன்றியை மட்டும் மறக்கிறோம்...

அடுத்தவன் முதுகில்
சவாரி செய்து
பெயரும் புகழும்
சம்பாதிக்கிறோம்...

மரணம் வேண்டாது
மன்றாடுகிறோம்...

இறைவன்...
படைப்பில் சிறந்தது
மானுடம் என்றான்

பூகோலக்காதையில்
பூரிக்கும் விடயமாய்
விளங்குவான் மனிதன்...

ஆண்டுகள் பல
நகர்ந்தால்
வாழ்ந்து சென்ற
வரிசையில் நிற்கும்
மானுடம்...

சைத்தானின்
சக்தியால்
உருவான வர்க்கமே


சாதித்தது என்ன...?

சாதியின் பெயரில்
சண்டைகள்
இனத்தால்
கலவரம்
மொழியால்மூடநம்பிக்கை...

படைத்தவனே
பதறுகிறான்
செய்த தவற்றை என்னி
வருந்துகிறான்...

ஏ...!!!
அற்புத மானுடமே
வந்தோம்
வாழ்ந்தோம்
மறைதோமென
வேண்டாமே
ஒரு வாழ்க்கை

வாழ்வித்தோம் என்று
வாயாறக்கூறி
விடைபெருவோம்
நிம்மதி பெருமூச்சு
நிலையாய் விடுவோம்...

பகுத்தறிவை கொண்டு
பாரெல்லாம் புகழ
வாழ்வோம்...

இறைவன் இட்ட கட்டளை
ஏற்று நடப்போம்...
எல்லாம் நமதாய்
எந்நாளும் நினைப்போம்...

அன்று கொண்டாடுவோம் 
ஆணந்த திருவிழா...

ஜெய்ஹிந்த்...!!!


என்றும் அன்புடன்
கலைச்செல்வன்




No comments:

Post a Comment